ரிஷப ராசியில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்! பணவரவால் மகிழும் 3 ராசிகள்
Malavya Rajyog 2023: மாளவ்ய ராஜயோகத்தால், திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் உறவு பலப்படும்
நியூடெல்லி: வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றி ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அதன் தாக்கம் பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் தெரியும். செல்வாக்கு மற்றும் வாழ்க்கையை சுகமாக வாழவைக்கும் கிரகம் என்று அழைக்கப்படும் சுக்கிரன், ஏப்ரல் 6 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு வருகிறார். இது மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கும்.
அதிலும் குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அபரிமிதமான செல்வத்தையும், தொழில் வாழ்க்கையில் பதவி உயர்வையும் தரும் யோகத்தை உருவாக்குகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று பார்ப்போம்.
மாளவ்ய ராஜயோகத்தால் மகிழும் ராசிகள்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகம் பல நன்மைகள் கொடுக்கும். மேஷ ராசியின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், திடீரென பணவரத்து அதிகரிக்கும். மறுபுறம் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் உறவு பலப்படும். இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சின் தாக்கத்தை கவனிப்பீர்கள். மக்கள் உங்களால் ஈர்க்கப்படுவார்கள். நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க | புதனின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் தொடங்கும்!!
ரிஷபம்: உங்கள் ஜாதகத்தின் லக்ன பாவத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியான நல்ல நாட்கள் தொடங்கும். இது உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும், நிதி நிலையும் பெரிதும் மேம்படும். இதனால் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
உங்களின் கடின உழைப்பு பலனளிக்கும், பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மறுபுறம், மாளவ்ய ராஜயோகத்தின் பார்வை உங்கள் ஜாதகத்தின் ஏழாவது வீட்டில் இருப்பதால், குடும்பம், மனைவி, குழந்தை என அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இந்த காலகட்டத்தில் உங்கள் மனைவியின் முன்னேற்றத்தை நீங்கள் காணலாம். திருமணமாகாதவர்களுக்கு மேளச்சத்தம் கேட்கும் வாய்ப்புகள் அதிகம்.
சிம்மம்: மாளவ்ய ராஜயோகம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஏனெனில் உங்கள் ஜாதகத்தின் கர்ம பாவத்தில் சுக்கிரன் தோன்றப் போகிறார். இதனால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறைந்தபட்சம், ஏற்கன்வே இருக்கும் வேலையில் ஒரு புதிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்குவதற்கு சாதகமான நேரம் இது. இந்த காலகட்டத்தில் தந்தையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மேஷ ராசியில் உதயமாகும் குரு பகவான்! குபேரனின் அருளை பெற்றுத் தரும் குரு சஞ்சாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ