இந்தியாவில் நாக வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்து வருவது. ஜோதிட சாஸ்திரங்களின்படி, ராகு, கேது கிரகங்களுக்கு உடல் கொடுத்துள்ள நாகர்கள், நமது வாழ்வில் அனைத்து நல்லது கெட்டதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ராகு கேது என இரு கிரகங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு கிரகமும் ஏதேனும் ஒரு விதத்தில் நாகங்களுடன் தொடர்புடையவை. எனவே, நாக தோஷம் இருந்தால் நாகசதுர்த்தி நாளன்று அதற்கான பரிகாரங்களை செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காரணமே தெரியாமல் ஏற்படும் துன்பங்களிருந்து மீளவும், வாழ்க்கையை நல்லவிதமாக வாழவும் நாக தேவதை வழிபாடு முக்கியமானது. ஆடி மாதத்தில் வரும் நாகபஞ்சமி நாளன்று, நாக தேவதைகளை வணங்கினால், அனைத்துவிதமான நாக தோஷங்கள் மற்றும் காலசர்ப்ப தோஷம் போன்ற இன்னல்கள் விலகி நற்பலன்களைப் பெறலாம்.


நாகசதுர்த்தி விரதம் பின்னணி


பாம்புகளின் தலைவனாக விளங்கிய ‘தட்சகன்’ நாகம், பரிட்சித் என்ற மன்னனை கடித்ததால், அரசர் இறந்தார். தந்தையின் இறப்புக்கு பலி வாங்க நினைத்த பரிட்சித்தின் மகன் ஜனமேஜயன், தந்தையின் இறப்புக்கு காரணமான பாம்பு இனத்தையே அழிக்க ‘சர்ப்ப-யக்ஞம்’ என்ற வேள்வியை நடத்தத் தொடங்கியதும், ஆயிரக்கணக்கான பாம்புகள் வேள்வித்தீயில் வந்து விழுந்து இறந்தன. 


மேலும் படிக்க | அலிக்கிரகமாக இருந்தாலும் வைர கிரகம் புதன்! செல்வத்துக்கு அதிபதியாகும் புதனின் அம்சங்கள்! 


கடவுள்கலில் விஷ்ணு பாம்பையே படுக்கையாகக் கொண்டவர் என்றால், சிவபெருமான் கழுத்தில் பாம்பை ஆபரணமாக அணிந்தவர், விநாயகரோ, அருணாக்கயிறாக பாம்பை தரித்தவர், அன்னை பார்வதியும் நாகத்தை தன்னுடனே வைத்திருப்பவர், முருகக்கடவுளின் மயிலின் கீழ் பாம்பும் இடம் பெறும். இப்படி பாம்பின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தும் வகையில் கடவுள்களே பாம்புக்கு முக்கிய இடம் கொடுத்திருக்கும்போது பாம்பினமே அழிந்துவிட்டால் உலகம் என்ன ஆகும்?


பாம்புகள் உலகில் இருந்து அழிந்துவிட்டால் ஏற்படும் விளைவுகளை தடுக்கும் வகையில், அஸ்தீகர் என்ற முனிவர் ஜனமேஜயன் செய்த யாகத்தை நிறுத்தி நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். இப்படி நாகங்களுக்கு சாபவிமோசனம் கிடைத்த நாள் ஆடி மாதம் வரும் சதுர்த்தி தினம் என்பதால், இந்த மாத அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தியை நாகசதுர்த்தியாக அனுசரிக்கிறோம்.


நாகதோஷங்கள், முன்வினை கர்மாக்களை கழிக்க நாகசதுர்த்தி விரதம் இருக்கத் தொடங்குபவர்கள், ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியில்  நாகசதுர்த்தி விரதத்தை தொடங்க வேண்டும். பாம்புப் புற்றுக்கு பால் ஊற்றுவது, நாகங்களுக்கு பிடித்த உணவுகளை படைத்து வணங்குவது என இடத்திற்கு இடம் நாகங்களை வழிபடும் விதம் வெவ்வேறாக இருந்தாலும் நாகங்களை வழிபடும் நாள் மட்டும் மாறாது.


கோவில்களில் உள்ள நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்வது, பாலபிஷேகம் செய்வது என அபிஷேகங்கள் செய்த பிறகு, மஞ்சள் குங்குமம் வைத்து, நாக சதுர்த்தி வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பது தொன்றுதொட்டு தொடரும் ஐதீகம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | காலசர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாகபஞ்சமி வழிபாடு! பாம்புக்கு பால் வார்த்தால் தோஷம் நீங்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ