நவகிரகங்களும் ஆண் கிரகம், பெண் கிரகம் எனவும் அலிக்கிரகமாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புத்தி மற்றும் பக்குவம் அறிவுக்கு காரகரான புதன் அலிக்கிரகம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்.சூரியனுக்கு மிக அருகாமையில் இருந்து சூரிய வெளிச்சத்தை அதிக அளவில் நேரடியாக பெறும் கிரகமாக இருப்பதால் புதன் கல்விக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். வெளிச்சத்தில்தான் எதையும் தெளிவாக பார்க்கமுடியும். புத்தியால்தான் எதையும் தெளிவாக உணரமுடியும், இந்த அடிப்படையில் புதனை புத்திக்காரகன் என்று சொல்கின்றனர்.
உருவத்தில் மிகவும் சிறிய கிரகமாகவும், சந்திரனைப்போல் மிகவும் வேகமாக நகரக்கூடியதாகவும் அறியப்படும் கிரகம் புதனாகும். புதன் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்லும்போது சூரியனுக்கு முன்னும் பின்னும் 28 பாகைகளுக்கு மேல் விலகிச்செல்லாது. இதனால் இந்த கிரகத்திற்கு அடிக்கடி வக்கிர கதி மற்றும் அஸ்தங்க கதி ஏற்படுகிறது.
அலிக்கிரகம்
புதன் கிரகத்தின் ஒரு பகுதி வெளிச்சமாகவும், மற்றொரு பகுதி எப்பொழுதும் இருட்டாகவும் இருக்கும். இப்படி இரட்டைத்தன்மையுடைய கிரகமாக இருக்கும் புதனின் வெளிச்சமான பகுதியை ஆணாகவும், இருண்ட பாகத்தை பெண்ணாகவும் பாவிப்பதால் தான் புதனை அலிக்கிரகம் என்கிறார்கள்.
அடிப்படையிலேயே இரட்டைத்தன்மை உள்ள அனைத்தும் புதனாக பாவிக்கப்படுகிறது. திருநங்கைகளை குறிப்பது புதனாகும். தெய்வங்களில் அம்சங்களில் சங்கர நாராயணர், ஹரிஹரன், ஐயப்பன் போன்றவை புதன் அம்சமாகும். சுபகிரக வரிசையில் புதனும் சேரும். ஆனால் புதனோடு பாவகிரகங்கள் சேர்ந்தால் பாவி ஆகிவிடும்.
எந்த கிரகத்தோடு சேர்கிறதோ அந்த கிரகத்தின் தன்மை பிரதிபலிக்கும் அலி கிரகமான புதன் தான் கேட்டை, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களின் நாயகனாக இருக்கிறார். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்தால் புதஆதித்ய யோகம் உண்டாகும். புதாதித்ய யோகம் இருந்தால் கல்வி மூலம் பெரிய மதிப்பு மரியாதை ஏற்படும்.
புதன் எப்பொழுதும் சூரியனை ஒட்டியே சஞ்சரிப்பதால், இதை துணை தேடும் கிரகம் எங்கிறார்கள். தனித்திருப்பது என்பது புதனுக்கு சாத்தியமில்லை. மனிதர்களில் இரண்டு பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நண்பர்களாக இருப்பார்கள் அல்லது காதலர்களாக இருப்பார்கள். எனவே புதனை நட்பு கிரகம், காதல் கிரகம் என அழைக்கிறார்கள்.
புதனின் நிறம் பச்சை என்பதால், பச்சை நிறத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் புதனுக்குரியவையாகும். மரகதக்கல் பச்சை நிறமுடையது என்பதால், அது புதனுக்கு உரிய ரத்தினக்கல்லாக கூறப்படுகிறது.
ஜாதகத்தில் லக்னத்தில் புதன் இருந்தாலோ அல்லது 10ம் பாவத்தில் புதன் பகவான் இருந்தாலும் தொழிலில் ஈடுபட்டால் வீண் விரயம் உண்டாகும். லக்னத்தில் இருந்து ஆறாம் பாவம் தான் கடன் பிரச்சினைகள், வம்பு-வழக்கு, கோர்ட்டு-கேஸ், அடிதடி சண்டை, அடிமை வேலை ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. ஆறாம் வீடாக கன்னி இருக்கிறது, கன்னி ராசிக்கு அதிபதி புதன் பகவான் ஆவார். அதனால் புதன் பகவான் எப்போதுமே ஜாதகத்தில் ஆறாம் பாவத்திற்கு உரிய ஆதிபத்தியங்களை தான் வெளிப்படுத்துவார்.
ஆறாம் பாவம் என்பது பிறரிடம் வேலை பார்ப்பது, குறைவான ஊதியத்திற்கு வேலை பார்ப்பது போன்ற பலன்களைக் கொடுக்கக்கூடியது. எனவே ஜாதகத்தில் லக்னத்தில் புதன் அல்லது 10ம் பாவத்தில் புதன் பகவான் இருப்பவர்களுக்கு தொழில் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் ஏமாற்றங்கள் ஏற்படும்.
ஆனால், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இதுபோன்ற ஜாதக அமைப்பு இருக்கலாம் அல்லவா? அப்படி இருந்தால், வேலைக்கு சரியான வேலை ஆட்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்படலாம், வேலையாட்கள் மூலமாகவே பிரச்சினைகள் ஏற்படும். ஒரு கட்டத்தில் ஏன் தொழில் செய்ய வேண்டும் என்ற விரக்தியையும் புதன் ஏற்படுத்திவிடுவார். இது கஷ்டப்பட்டு திருந்துவதற்கான
ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கான ஜாதக அமைப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நாளும் கோளும் வாழ்க்கையை மாற்றியமைக்கும்! எதிர்வரும் வாரத்திற்கான ராசிபலன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ