இன்றைய ராசிபலன்... 3 நட்சத்திரங்களுக்கு ஜாக்பாட்! இந்த நாள் நல்ல நாளாக மலரும்!
Daily Rasipalan 2024 July 09 : 2024 ஜூலை 9... இன்று, எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? இன்றைய ராசிபலன் அறிவோம்...
இன்றைய ராசிபலன் : ஜோதிடம் என்ற அறிவியலின் அடிப்படையில் எதிர்காலத்தை கணித்து அதற்கேற்றாற் போல திட்டமிட்டு வாழலாம். இன்றைய நாள் யாருக்கு எப்படி இருக்கும் என்பதை கணித்துச் சொல்லும் ராசிபலன்... 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.
குரோதி ஆண்டின் ஆனி 25ம் நாள் வளர்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் கூடிய செவ்வாய்க்கிழமை, 09-07-2024
மேஷம்
எதிர்பாராத செலவுகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற கவலை உண்டாகும். ஆனால், வாழ்க்கை துணையின் திட்டமிட்ட செயல்பாடுகள் நிம்மதியைக் கொடுக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். அன்றாட நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளை சிதறவிட வேண்டாம். சொத்து தொடர்பான விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
இன்று அவசரப்பட்டு எதையும் செய்துவிட வேண்டாம், கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவுகள் தாமதமாக கிடைக்கும். உறவுகளிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம், சில முக்கியமான புரிதல்கள் ஏற்படும் நாள் இன்று. நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு இன்று நிதானமாக செயல்பட வேண்டிய நாளாக இருக்கும், எனவே பொறுமையுடன் செயல்படவும்.
மிதுனம்
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவதால் தெளிவு பிறக்கும். பணியில் முன்னேறுவதற்கான முயற்சிகள் சாதகமாக அமையும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகளை தவறவிட வேண்டாம். வேலையில் நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும், மொத்தத்தில் இன்று சாதகமான நாள்.
கடகம்
வேலையில் இருந்த இழுபறிகள் இக்கட்டுகள் எல்லாம் தானாக விலகும். கடக ராசியினருக்கு பயணங்களின் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். கல்வி சார்ந்த செலவுகளை செய்ய வேண்டியிருக்கலாம். ஷாப்பிங் செல்வதற்கு உகந்த நாள். தொழில் மற்றும் பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க | புத்ரதோஷத்தால் சோகமா? புத்ர சோகத்திற்கு பரிகாரங்கள்! வழிபட வேண்டிய தெய்வங்கள்
சிம்மம்
குடும்பத்தில் சில விஷயங்களில் விவாதங்கள் ஏற்படும், அதில் உங்களுடைய கருத்துகளை சொல்வதைத் தவிர்க்கவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். பொறுமையை அணுகுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். வதந்திகள் பற்றி கவலைப்படாமல் உங்கள் வேலையை மட்டும் செய்து வந்தால், நிம்மதியாக வாழலாம். முருகனை வழிபட்டால் மனதில் நிம்மதி கிடைக்கும்.
கன்னி
மன சஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்புகள் இன்று உங்களுக்கு ஏற்படலாம் என்பதால் புதிய நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வங்கி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள் இது. நண்பர்களைப் பற்றி பிறருடன் பேசுவதைத் தவிர்க்கவும். அது பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
துலாம்
சேமிப்பின் முக்கியத்துவம் என்ன என்பதைப் பற்றிய சிந்தனைகளும் எண்ணங்களும் இன்று அதிகமாக இருக்கும். உயர் கல்வி தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். உற்சாகத்தோடு செயல்படும் நாள் இது. உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் மனதில் நிம்மதி ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
விருச்சிகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் சற்று குறையும் வாய்ப்புகள் தென்படுகின்றன. விருச்சிக ராசிக்காரர்களுக்கு அரசு சார்ந்த பணிகளில் இதுவரை இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபாரத்தில் முதலீடு அதிகரிக்கும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மேம்படும். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
மேலும் படிக்க | வக்ர பெயர்ச்சி என்ற ஒன்றே ஜோதிடத்தில் கிடையாது! திடுக்கிட வைக்கும் ஜோதிட உண்மைகள்!
தனுசு
இன்று ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கும். வியாபாரம் தொடப்ரான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பயணங்களில் நிதானத்தைக் கடைபிடிகக்வும். மனதிலுள்ள கவலைகள் நீங்கும் நாள்
மகரம்
இழுபறியான செயல்பாடுகளை செய்வதில் கவனம் வேண்டும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல் ஏற்படும்.
கும்பம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முதலீடு விஷயங்களில் கவனமாக செயல்படவும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வாழ்க்கையை மாற்றும். கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு பணியில் சில மாற்றங்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை தவிர்த்தால் பிரச்சனை இல்லை. பொறாமைப்படுபவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பொறுமை வேண்டும் என்பதை மறக்காமல் இருந்தால் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.
மீனம்
சகோதர வகையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சில வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் அதேவேளையில் ஆடம்பரமான பொருட்களை வாங்கி வியாபாரம் செய்பவர்களுக்கு கவனம் வேண்டும். எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும் என்பதால் நிம்மதியான நாளாக இருக்குக்ம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற ‘சில’ சனி கோயில்கள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ