குரு பெயர்ச்சி பலன்கள் 2023: நம் வாழ்க்கையில் நமக்கு அனைத்தும் கற்றுக்கொடுக்கும் குரு எப்படி முக்கியமோ, அதேபோல கிரங்களின் உலகத்தில் குரு பகவான் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது. ஜோதிடத்தில், இது அறிவு கிரகம் என்று அழைக்கப்படுகிறது. குரு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போதெல்லாம் பூமியில் மட்டுமில்லாமல் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரு பாக்யம் வெற்றிக்கான வழியைக் காட்டுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு, 22 ஏப்ரல் 2023 அன்று, குரு மேஷ ராசியில் பெயர்ச்சியடைந்தார். இப்போது அடுத்த ஆண்டு மே 1, 2024 வரை, குரு மேஷத்தில் இருக்கும். குருவின் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் வரலாறு காணாத வெற்றியைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 11 மாத காலம் மிகவும் சிறப்பாக இருக்கக்கூடும். இதில் செல்வம், பெருமை, செழிப்பு, புகழ், ஆன்மிகம் இவற்றைத் தவிர இன்னும் நிறைய நேர்மறையான பலன்களை பெறுவார்கள். எனவே குருவின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | ரிஷப ராசியில் அஸ்தமிக்கும் புதன்! நிதி நெருக்கடியை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!


மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அடுத்த 11 மாதம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். ஏனெனில் குரு பெயர்ச்சி மேஷ ராசியில் தான் நடந்துள்ளது. குரு ஒன்பதாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் வெற்றியும், வாழ்க்கையில் அதிர்ஷ்டமும் உண்டாகும். பணப்பிரச்சனைகளும் முற்றிலும் விலகும். இந்த காலகட்டத்தில் ஆன்மீகத்தின் பக்கம் மேஷ ராசிக்காரர்கள் திரும்பலாம்.


சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி வெற்றியைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பெருகும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் தொடர்புகள் ஏற்படும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.


கடகம் - குரு கடக ராசியின் பத்தாம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த காலம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். ஆன்மிகத்தை நோக்கி சரியான அடியை எடுங்கள், ஏனென்றால் அதற்கு இதுவே சரியான நேரம். நீங்கள் தொழில் அல்லது வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இதுவே ஒரு நல்ல நேரமாகும். இந்த நேரத்தில் மாணவர்களும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.


கன்னி - மேஷ ராசியில் குருவின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு பண பலன்களைத் தரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் உடல்நிலை சிறப்பாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.


துலாம் - குரு சஞ்சாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பண லாபத்தை தரும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்ள முடியும். புதிய சொத்து-வாகனம் போன்றவற்றை வாங்கலாம்.


தனுசு - தனுசு ராசியின் ஐந்தாம் வீட்டில் குரு அமர்ந்துள்ளார். அதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சுபமான காலமாக அமையும். பிள்ளையின் தரப்பிலிருந்து நல்ல செய்திகளை நீங்கள் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் தூசு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இது தவிர ஆன்மிகத்தை நோக்கி உங்களின் பயணம் தீவிரமாக தொடரும்.


மீனம் - மீனத்தில் குரு பெயர்ச்சி முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும், இதன் காரணமாக நீங்கள் பெரிய வெற்றியைப் பெறலாம். மூத்த அதிகாரிகள் உதவுவார்கள். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்களை வாங்கலாம். சுற்றுலா செல்லலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கும், உடல் நலம் கெடலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ