ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வருமானம் பெருகும்..திருப்பங்கள் ஏற்படும்

Rahu Ketu Transit: ராகு மற்றும் கேது வருகிற அக்டோபர் இறுதியில் பெயர்ச்சி அடைவார். அதன்படி ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு என்ன பலன் தரும் என்பதை பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 12, 2023, 07:25 AM IST
  • பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும்.
  • பதவி உயர்வும், பணவரவு ஏற்படும்
  • மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வருமானம் பெருகும்..திருப்பங்கள் ஏற்படும் title=

இன்று நாம் ராகு மற்றும் கேது பெயர்ச்சியின் தாக்கத்தை பற்றி காண உள்ளோம். இந்த பெயரச்சி இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி அன்று நடக்கிறது. அதேபோல் நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள் ஆகும், அத்துடன் ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். இப்போது மேஷ ராசியில் ராகு குரு உடன் பயணம் செய்கிறார். மறுபுறம் கேது துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இந்த இரு கிரகங்களும் வருகிற அக்டோபர் இறுதியில் பெயர்ச்சி அடைவார். அதன்படி ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் எல்லா கஷ்டங்களும் விலகும். பண வரவு சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். பதவி உயர்வுகள் கிடைக்கும்.

மேலும் படிக்க | வக்ர சனியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு 4 மாதம் பொற்காலம்... ராஜவாழ்க்கை!!

ரிஷபம்: பண வரவை அதிகரிக்கும். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் இடையே காதல் அதிகரிக்கும். பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கேது பகவான் ரிஷப ராசிக்காரர்களுக்கு பொன் பொருள் சேர்க்கையை தருவார். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு ஏதுவான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். பண வரவு ஏற்படும். உங்கள் பேச்சில் ஒரு முதிர்ச்சி தன்மை தென்படும். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும்.

கடகம்: பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரும் மதிப்பு அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் லாபத்தை அடைவார்கள். வாழ்க்கை தரம் உயரும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும்.

சிம்மம்: புது உத்வேக சூழல் உருவாகும். வெற்றிகள் தேடி வரும். பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். திடீர் பயணங்கள் செல்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டும் காலமிது.

கன்னி: கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். ஆன்மீக சுற்றுலா செல்ல நேரிடும். புண்ணிய காரியங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்திற்கு செல்லும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News