5 நாட்களில் சனியால் சச மகா யோகம், பத்திர யோகம்; இந்த 6 ராசிர்களின் ஜாக்பாட்

Saturn Retrograde Aquarius 2023: ஜூன் 17 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி அடைந்து சச மகா யோகத்தையும், பத்திர யோகத்தையும் ஜூன் மாத இறுதியில் உருவாக்கும். இதன் போது 6 ராசிகளுக்கு சுப பலன்கள் கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 12, 2023, 12:14 PM IST
  • சச மகா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்.
  • சிம்ம ராசிக்காரர்கள் சொந்த தொழில் தொடங்கலாம்.
  • வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
5 நாட்களில் சனியால் சச மகா யோகம், பத்திர யோகம்; இந்த 6 ராசிர்களின் ஜாக்பாட் title=

சனி வக்ர பெயர்ச்சியின் நேர்மறை தாக்கம்: கிரகங்களிலேயே சனி மிகவும் கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. பொதுவாக சனியின் இயக்கம் மிக மெதுவாக இருக்கும், ஏனெனில் சனி தனது ராசியை மாற்ற இரண்டரை வருடங்கள் ஆகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருக்கணித பஞ்சகத்தின் படி சனி கிரகம் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார். இப்போது ஜூன் 17 ஆம் தேதி அன்று, சனி தனது சொந்த ராசியில் வக்ர திசையில் நகரும். சனி வக்ர பெயர்ச்சி ஜுன் இறுதியில் சச மகா யோகத்தையும் பத்திர யோகத்தையும் உருவாக்கும். இதன் போது ஆறு ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். எனவே இந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சச மகா ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்
ஜூன் 17 ஆம் தேதி இரவு 10:48 மணிக்கு சனி வக்ர பெயர்ச்சி நிகழும், அதனால் சச மகா ராஜயோகம் உருவாகும். சனி 111 நாட்கள் இந்த நிலையில் இருந்து 3 ராசிக்காரர்களுக்கு பலன்களைத் தருவார்.

மேலும் படிக்க | வக்ர சனியால் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளுக்கு 4 மாதம் பொற்காலம்... ராஜவாழ்க்கை!!

விருச்சிகம் (Scoripon) - சனி பகவான் உத்தியோகத்தில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்மைகளை தருவார். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு ஏற்படுத்தித் தரும். திடீர் பண ஆதாயம் உண்டாகலாம். குடும்பச் சூழல் நன்றாக இருக்கும். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

சிம்மம் (Leo) - சிம்ம ராசிக்காரர்களுக்கு சச மகா ராஜயோகம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் சொந்த தொழில் தொடங்கலாம். வலுவான லாபம் கிடைக்கும். பொருளாதார வாழ்க்கை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். பணியிடத்தில் லாபம் பெறலாம்.

கும்பம் (Aquarius) - கும்ப ராசியில் மட்டுமே சச மகா ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த நேரம் கும்ப ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும்.

பத்திர ராஜ யோகம் அமைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் - புதன் தனது ராசியை ஜூன் கடைசி வாரத்தில் அதாவது ஜூன் 24 ஆம் தேதி மாற்றுகிறார். அதன் காரணமாக பத்திர ராஜ யோகம் உருவாகும். சாஸ்திரங்களின்படி, இதை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

துலாம் (Libra) - புதன் பத்திர ராஜயோகத்தை உருவாக்கி துலாம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தைத் பிரகாசிக்க வைக்கும். நீங்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். பதவி உயர்வு இருக்கும். உங்களின் துறையில் உகந்த புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

கும்பம் (Aquarius) - புதனின் பெயர்ச்சி கும்ப ராசிக்கு சாதகமாக கருதப்படுகிறது. குழந்தை தரப்பில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் உண்டாகலாம்.

மீனம் (Pisces) - மீன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். புதன் மீன ராசிக்காரர்களுக்கு ஆடம்பர பொருட்களைப் பெற செய்யும். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். மரியாதை கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மிதுனத்திற்கு செல்லும் சூரியன்! ‘இந்த’ ராசிகளுக்கு பிரச்சனைகள் ஆரம்பம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News