இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கும், உடல் நலம் கெடலாம்

Shani Vakri 2023 Effects: ஜூன் 17ல் சனி கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனியின் வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் பிரச்சனைகளை அதிகரிக்கப் போகிறது. எந்தெந்த நபர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 10:14 AM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது.
  • தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.\
  • காதல் உறவில் விரிசல்கள் ஏற்படலாம்.
இன்னும் 3 நாட்களில் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பிக்கும், உடல் நலம் கெடலாம் title=

சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி மிக முக்கியமான கிரகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் சுப ஸ்தானத்தில் இருந்தால் அந்த ராசிகளுக்கு அதீத பலன் கிடைக்கும் என்பார்கள், அத்துடன் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அதேபோல் சனி பகவான் கர்மாவை வழங்குபவர் என்றும் அழைக்கப்படுகிறார், ஒவ்வொரு நபருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நன்மை மற்றும் தீமை பலன்களை தருவார். எனவே வருகிற ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி வக்ரபெயர்ச்சி அடையப்போகிறது. அடுத்த ஆறு மாதம் இதே நிலையில் தான் சனி பயணிப்பார்.

பொதுவாக ஜோதிட ரீதியாக சனியின் வக்ர பெயர்ச்சி நல்லதாகக் கருதப்படவில்லை. சனியின் வக்ர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் அசுப பலன்களைப் பெறலாம், தீமைகள் ஏற்படலாம். இந்த ராசிக்காரர்களிக்கு உடல் நலத்தில் கோளாறுகள் ஏற்படலாம், தொழிலில் நஷ்டங்கள் ஏற்படலாம். எனவே ஜூன் 17 ஆம் தேதி நடக்க உள்ள சனியின் வக்ர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கப் போகிறது என்பதை இந்த கட்டுரை மூலம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | இன்னும் 3 நாட்களே...வக்ர சனியால் இந்த ராசிகளுக்கு அதிரடி மாற்றம், பணமழை பொழியும்

கடகம் (Cancer)- சனியின் வக்ர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சனியின் வக்ர பெயர்ச்சி காரணமாக, கடக ராசிக்காரர்களின் நிதி நிலையும் மோசமடையலாம். உங்கள் செலவுகள் வேகமாக அதிகரிக்கும். உத்தியோகத்தில் குழப்பம் ஏற்படுவதால் உங்கள் மன அழுத்தமும் கூடும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.

சிம்மம் (Leo)- சிம்ம ராசிக்காரர்கள் சனியின் வக்ர பெயர்ச்சியால் ஏமாற்றம் அடைவார்கள். உங்கள் மனம் வேலையில் ஈடுபடாது, இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கலாம். இதன் போது மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் கவனமாக இருக்கும். வியாபாரத்திலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். பணத்தில் சிக்கிக்கொள்ளலாம். ஆபத்தான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் (Scorpio)- விருச்சிக ராசிக்காரர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனியின் பிற்போக்கு நிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்காது. குடும்ப விஷயங்களுடன், தொழில் மற்றும் நிதி விஷயங்களிலும் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியமும் மோசமடையக்கூடும். வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். காதல் உறவில் விரிசல்கள் ஏற்படலாம்.

மீனம் (Pisces)- சனியின் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மன மற்றும் பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் பல கசப்பான செய்திகளை நீங்கள் பெறலாம். குடும்ப வாழ்க்கையுடன், பணியிடத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமை ஆகியவை வீட்டின் சூழலைக் கெடுக்கும். உங்கள் ஆரோக்கியமும் மோசமடையலாம். அதனால்தான் இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ரத்தால் சூப்பர் டூப்பர் குபேர ராஜயோகம்..! 4 மாதங்களுக்கு பணமழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News