Sani Nakshatra Peyarchi: நவக்கிரகங்களின் நாம் செய்யும் கர்மாவை பொறுத்து பலன் தருபவர் சனி பகவான் ஆவார். நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். அதேபோல் நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகவும் சனி பகவான் விளங்குபவர் சனி ஆவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக்கும். அந்த வகையில் தற்போது சனி பகவான் தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சனி பகவான் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்தில் இடப் பெயர்ச்சி அடைந்தார். பூரட்டாதி நட்சத்திரம் குரு பகவானின் அதிபதி நட்சத்திரம் ஆகும். எனவே இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். எனினும் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் உயரங்களை அடைவார்கள். எனவே சனியின் நட்சத்திர மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிக லாபகரமான பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை


மேஷம்: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதம் பெரிய அளவு பலனைத் தரும். பலவிதமாக மங்களகரமான பலனைப் பெறுவீர்கள். உங்களது ஆசைகள் நிறைவேறும். செல்வம் கூடும். ஆசைகள் நிறைவேறும். ஆறு மாதங்களில் பதவி உயர்வு தொடர்பாக நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும். 


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியால் பலன்கள் அதிகமாக கிடைக்கும். மதப் பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகளை நீங்கள் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். சகோதரரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடன் தொல்லை நீங்கும். அடுத்த ஆறு மாதங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். நோய், கடன் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுப்பபடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. 


துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியால் மிகவும் நன்மை பயக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி யோகம் உண்டாகும். துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் கூடும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். செல்வம் பெருகும்.


தனுசு: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும். குழந்தைகளின் தரப்பிலிருந்து நல்ல செய்திகளை பெறலாம். சகோதர சகோதரிகளுடனான உறவுகள் வலுவடையும். பயணங்கள் மூலம் சாதகமாக பலன் கிடைக்கலாம்.


கும்பம்: சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைந்துள்ளது, கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். 30 முதல் 50 வயது வரை உள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். நீங்கள் உயர்வையும் முன்னேற்றத்தையும் பெறலாம். செல்வ வளம் கூடும். பல நல்ல செய்திகளை பெறலாம். பணியிடத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ