சனியின் மிகப்பெரிய நிகழ்வு.. இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜராஜ வாழ்க்கை

Sani Nakshatra Peyarchi: சனிபகவானின் ஸ்தானத்தில் தற்போது மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு சனி நட்சத்திரத்தை மாற்றியுள்ளார். அதன்படி தற்போது சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். 

Sani Nakshatra Peyarchi: கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி, சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த நட்சத்திரம் வியாழனின் நட்சத்திரமாகும். இதனால் சனி நிச்சயமாக குருவை போன்ற சுப பலன்கள அள்ளித் தருவார். எனவே இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பெரிதும் பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1 /7

மேஷம்: பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆறு மாதம் பெரிய அளவு பலனைத் தரும். பலவிதமாக மங்களகரமான பலனைப் பெறுவீர்கள். உங்களது ஆசைகள் நிறைவேறும். செல்வம் கூடும். ஆசைகள் நிறைவேறும். ஆறு மாதங்களில் பதவி உயர்வு தொடர்பாக நல்ல செய்தியைப் பெறலாம். குழந்தை பாக்கியம் உண்டாகும்.   

2 /7

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியால் பலன்கள் அதிகமாக கிடைக்கும். மதப் பயணம் மேற்கொள்ளலாம். உங்கள் பதவி உயர்வு பற்றிய நல்ல செய்திகளை நீங்கள் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். சகோதரரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். கடன் தொல்லை நீங்கும். அடுத்த ஆறு மாதங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும்.  

3 /7

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். நோய், கடன் மற்றும் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுப்பபடுவீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.   

4 /7

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனியால் மிகவும் நன்மை பயக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு சனி யோகம் உண்டாகும். துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானம் கூடும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கலாம். செல்வம் பெருகும்.  

5 /7

தனுசு: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும். குழந்தைகளின் தரப்பிலிருந்து நல்ல செய்திகளை பெறலாம். சகோதர சகோதரிகளுடனான உறவுகள் வலுவடையும். பயணங்கள் மூலம் சாதகமாக பலன் கிடைக்கலாம்.  

6 /7

கும்பம்: சனி பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைந்துள்ளது, கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். 30 முதல் 50 வயது வரை உள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானம் பெருகும். நீங்கள் உயர்வையும் முன்னேற்றத்தையும் பெறலாம். செல்வ வளம் கூடும். பல நல்ல செய்திகளை பெறலாம். பணியிடத்திலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.