வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்; இனி ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!
குரு பெயர்ச்சி 2022: கடவுள்களின் குரு என்று அழைக்கப்படும் குரு பகவான் நவம்பர் 24-ம் தேதி வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், இதனால், அதிர்ஷ்ட காற்றை சுவாசிக்கப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
குரு பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் அதன் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். ஒரு கிரகம் தனது ராசியை மாற்றும் போது, அது 12 ராசிகளையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது. தேவர்களின் குரு என்று அழைக்கப்படும், குரு பல்கவான் இம்மாதம் நவம்பர் 24ம் தேதி மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இவர்களின் சஞ்சாரம் காரணமாக 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாற உள்ளது. குரு பகவான் ராசி மாறுவதால் குறிப்பிட்ட சில ராசிகளின் வீட்டில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும், பண மழையும் பொழியும்.
குரு பகவான் இந்த ஆண்டு ஜூலை 29 அன்று மீனத்தில் வக்ர பெயர்ச்சி ஆன நிலையில், இப்போது நவம்பர் 24ஆம் தேதி இந்த ராசியில் வியாழன் வக்ர நிவர்த்தி அடைகிறார். வியாழன் கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் 1 வருடம் ஆகும். குரு பகவான் என்னும் வியாழன் கிரகம் செல்வம், பெருமை, கல்வி, குழந்தைகள், ஆன்மீகம், திருமணம், மரியாதை மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறது.
குருவின் வக்ர நிவர்த்தியினால், இந்த 4 ராசிக்காரர்களுக்கும் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
வியாழன் ராசி மாற்றத்தால் கடகம், விருச்சிகம், கன்னி, ரிஷபம் ஆகிய ராசிக்காரர்களின் நிலை முன்னேற்றம் அடையப் போகிறது என்கின்றனர் ஜோதிடர்கள். தொழில்-வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். மேலும் பலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல ஆர்டர்களையும் பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும். நீண்ட நாட்களாக இருந்த நோய் குணமாகும். பிள்ளைகளின் கல்வித் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!
தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி 'குரு'
குரு பகவான் மீனம் மற்றும் தனுசு ராசியின் அதிபதியாக கருதப்படுகிறது. எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் அவரது சிறப்பு அருள் உண்டு. மறுபுறம், தங்கள் ஜாதகத்தில் குரு பகவான் நிலை சிறப்பாக இல்லாதவர்கள், சில பரிகாரங்களை செய்வதன் மூலம் பலன் அடையலாம். வியாழன் தோறும் விஷ்ணுவை வழிபட வேண்டும். மேலும், மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்து, முடிந்தவரை பசுக்களுக்கு உணவளிக்க வேண்டும். இந்த பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலம், வியாழ பகவான் மகிழ்ச்சியடைந்து, தனது ஆசீர்வாதங்களைப் பொழிகிறார் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ