குருவின் சஞ்சாரத்தினால் ராஜயோகத்தை பெறும் ‘3’ ராசிகள் இவை தான்!

ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2022, 02:56 PM IST
  • தொழில்-வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும்.
  • உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வர்த்தகர்கள் முக்கிய ஒப்பந்தங்களை முடிக்கலாம்.
குருவின் சஞ்சாரத்தினால் ராஜயோகத்தை பெறும் ‘3’ ராசிகள் இவை தான்! title=

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் அனைத்து இராசி களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜோதிடத்தில், குரு அதிர்ஷ்டம் மற்றும் அறிவின் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் குருவில் நிலை வலுவாக இருந்தால், அந்த நபர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும், வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். கடவுள்களின் குருவாகக் கருதப்படும் வியாழன் எனப்படும் குரு பகவான், நவம்பர் 24ம் தேதி தனது நிலையை மாற்றிக் கொள்ளப் போகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார் தற்போது வக்ர நிலையில் இருக்கும், குரு நவம்பர் 24 முதல் தனது நிலையை மாற்றிக் கொள்வது 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

குருவின் நிலை மாற்றம் 3 ராசிக்காரர்களுக்கு நவம்பர் 24-ம் தேதி ராஜயோகத்தை உருவாக்கி அபரிமிதமாகப் பணம் சம்பாதிப்பார்கள். இத்துடன் தொழிலில் வெற்றிகளை அள்ளிக் குவிப்பார்கள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
 
ரிஷபம்: 

குருவின் இந்த சஞ்சாரம், ரிஷப ராசிக்காரர்களுக்கு அபமிதமான வெற்றியைத் தருவார். அவர்களின் வருமானம் எதிர்பார்த்தத்தை அவிட அதிகமாகலாம். குரு பெயர்ச்சி காரணமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திடீரென்று பண வரவு கிடைக்கும். நீங்கள் முக்கியமான ஒரு பிராஜெக்டில் இணைய வாய்ப்பு கிடைக்கும். புதிதான வேலை வாய்ப்பு பெறலாம் அல்லது இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் கிடைக்கும். வர்த்தகர்கள் முக்கிய ஒப்பந்தங்களை முடிக்கலாம். லாபம் கூடும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிதி நிலைமையில் முன்னேற்றம் உங்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். நாள்பட்ட நோயிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம்  சஞ்சாரம் ராஜயோகத்தை உருவாக்கி சுப பலன்களைத் தரும். தொழில்-வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் காத்திருப்பு முடியும். சம்பளம் கூடும். வியாபாரம் பெருகும். புதிய வேலையைத் தொடங்கலாம். லாபமும் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் உருவாகும், அது எதிர்காலத்தில் நன்மைகளைத் கொண்டு வந்து தரும்.

மேலும் படிக்க| அக்டோபர் மாதம் இந்த ராசிகளுக்கு ராஜ யோகம், பண மழை பொழியும்: உங்க ராசி இதுவா? 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். சக்தி வாய்ந்த விபரீத ராஜயோகத்தை கொடுக்கிறது. இதனால், எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் . வேலையில் விரைவான வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புபவர்களின் கனவு நனவாகும். இதுவரை கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைந்து நிறைவடையும். வியாபாரமும் பெருகும். உத்தியோகத்தில் மரியாதை பெறுவீர்கள். தேர்வு அல்லது நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Mars Transit: மூன்றே வாரங்களில் 'இந்த' ராசிகளின் வாழ்க்கையில் பொற்காலம் தொடங்கும்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News