Jupiter Transit In Mrigasirita: வேத ஜோதிடத்தின்படி, நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். இதன் பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடும். அந்த வகையில் இந்து பஞ்சாங்கத்தின் படி மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், செல்வன், கல்வி, குழந்தை பாக்கியம் மற்றும் செழிப்பு போன்றவற்றை அள்ளிக் கொடுக்கும் குரு வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி, 2024 அன்று ரோகிணி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, மிருகசீரிட நட்சத்திரத்தில் நுழைந்துப் போகிறது, இதன் பிறகு அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது நவம்பர் 28 ஆம் தேதி, 2024 அன்று மதியம் 01:10 மணி வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் தான் பயணத்தை மேற்கொள்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குருவின் நட்சத்திர பெயர்ச்சி ஒரு சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான பலன்களை அள்ளித் தரும். இந்த நேரத்தில், உங்களின் வேலைகள் சுறுசுறுப்பாக நிறைவு பெரும். செல்வ வளர்ச்சி இருக்கும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும். இந்நிலையில் குரு நட்சத்திர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கட்டு கட்டாக பணம், அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேஷம்: மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவது மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரப்போகிறது. இந்த பெயர்ச்சி இரண்டாம் வீட்டில் நடக்கப் போகிறது. புதிய வழியில் வருமானம் வந்து சேரும். புதிய பொறுப்புகளை பெருமையுடன் பெறலாம்.


மேலும் படிக்க | Saturday Worship Of Hanuman: சனிக்கிழமையில் சனீஸ்வரரைத் தவிர யாரை வணங்கினால் சனிதோஷங்கள் நீங்கும்? அனுமார் வழிபாடு!


ரிஷபம்: குரு ரிஷப ராசியின் லக்ன வீட்டில் பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். வருமானத்தை அதிகரிக்கும். வெளிநாடு செல்லலால், இதனால் சாதகமான சூழல் நிலவும். செல்வம் செல்வாக்கு சேரும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


கன்னி: கன்னி ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு பெயர்ச்சி, தாராளமான தன வரவு, பதவி உயர்வு, சம்பள உயர்வு என உயர்வை மட்டுமே பெறுவீர்கள். நிதிப் பலன்கள் கிடைக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், திடீர் நிதி ஆதாயமும் உங்களை வந்து சேரும். பங்குச் சந்தியில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தை தரும்.


விருச்சிகம்: குரு விருச்சிக ராசியின் ஏழாவது வீட்டிற்குள் பெயர்ச்சி அடைகிறார், இது தொழிலுக்கு வலுவாக ஸ்தானத்தை தரும். திருமண யோகமும் குழந்தை பாக்கிய யோகமும் கைகூடும். தொழிலை விரிவுபடுத்தலாம். நல்ல லாபத்தையும் பெறலாம்.


மகரம்: குரு மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குரு ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் பெருகும். நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்கில் சிக்கித் தவித்துத் கொண்டு இருந்தால் இப்போது தீர்வு பெருகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் சிக்கல்கள் நீங்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sun Transit Rasipalan: ஆவணி மாதத்தில் சூரியனிடம் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ