ஆவணி மாதத்தில் சூரியனிடம் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன்!

Sun Transit Rasipalan : சுதந்திர தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் சூரியனின் பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கும்? குரோதி ஆண்டு ஆவணி மாத ராசிபலன்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 10, 2024, 12:26 PM IST
  • சிம்ம ராசிக்கு தைரியத்தை அதிகரிக்கும் சூரியப் பெயர்ச்சி!
  • ஆகஸ்ட் 16ம் தேதியன்று சூரியப் பெயர்ச்சி
  • நல்வாய்ப்புகளை வழங்கும் சூரியன்
ஆவணி மாதத்தில் சூரியனிடம் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! சிம்மத்தில் சஞ்சரிக்கும் சூரியன்!

ஒன்பது கிரகங்களில் நவகிரக ராஜாவான சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இன்னும் 6 நாட்களில் பெயர்ச்சியாகப் போகிறார். சிம்ம ராசியில் சூரிய சஞ்சாரம் நடைபெறுவது, இந்த குரோதி ஆண்டில் விசேஷமானது. அதிலும், சிம்ம ராசியினருக்கு நம்பிக்கையையும், கலைகளில் விருப்பத்தையும் தரக்கூடிய சுபமான பெயர்ச்சியாக இருக்கும்.  

Add Zee News as a Preferred Source

சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. 12 ராசிகளை சூரியன் முழுமையாக சுற்றினால் ஓராண்டு என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சூரியன் ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு பெயரும்போது தமிழ் மாதத்தின் புதிய மாதம் பிறக்கிறது. சூரியனின் பெயர்ச்சியானது அனைத்து ராசிகளுக்கும் மாறுபட்ட பலன்களைக் கொடுக்கும்.

சூரியனின் இந்தப் பெயர்ச்சியால், 4 ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாக இருக்கும் என்று ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சிம்ம ராசியில் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15ம் தேதி வரை சஞ்சரிக்கும் சூரியனின் சஞ்சாரக் காலமான 30 நாட்கள் கவனமாக இருக்க வேண்டிய 4 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்...

மேலும் படிக்க | கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் குஷி தான்! ஏழரை சனியில் இருந்து விடுதலை!

ரிஷபம்

ராசி மண்டலத்தில் இரண்டாவது ராசியான ரிஷபம், சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சூரியனின் சஞ்சாரத்தால் அதிக பாதிக்கப்படும். ரிஷபத்திற்கு சூரியன் மூன்றாம் வீட்டில் இருப்பதால், ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் சற்று பிரச்சனைகள் வரலாம். நிலம், வீடு போன்ற சொத்து விவகாரங்களில் முடிவெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

சொத்து விவகாரங்களில் சிக்கலை ஏற்படுத்தும் சூழலை சூரியன் ஏற்படுத்துவார் என்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் விரயம் ஆகும் காலமாக இருப்பதால், ஒரு முறைக்கு பல முறை யோசித்து செலவு செய்யவும். 

கன்னி

சூரியனின் சிம்ம ராசி சஞ்சாரம் ,கன்னி ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் இருக்கும். இந்த காலகட்டத்தில், கன்னி ராசிக்காரர்களுக்கு அரசுத்துறை தொடர்பான வேலைகள் அனைத்திலும் தடை ஏற்படும். எதையும் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்படுங்கள். ஏனென்றால் நஷ்டப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

நட்டம் என்பது பணமாகவோ பொருளாகவோ ஏன் மன அமைதியாகக்கூட இருக்கலாம். ஆனால் பண பரிவர்த்தனைகளில் குறிப்பாக கவனமாக இருங்கள். கவலைகள் அதிகரிப்பதால், தூக்கம் கெடும்.

மேலும் படிக்க | சனிக்கு பிடித்தமான 2024 ஆகஸ்ட் 8! ஏன் எப்படி? இது எண் கணித ஜோதிடம் சொல்லும் ஜோசியம்!

மகரம்

சூரியனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களின் இயல்பில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். சிம்மத்தில் சூரியன் இருப்பது, மகர ராசியினருக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். கோபத்தால் ஏற்படும் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். அளவுக்கு அதிகமான கோபத்தால், நண்பர்களையும் விரோதியாக்கிக் கொள்வீர்கள்.

எனவே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. தேவைக்கு அதிகமாக சிந்தித்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். சிம்ம ராசியில் சூரியனின் சஞ்சாரம் ஆரோக்கியத்திற்கும் பாதகமானதாக இருக்கும். ஆரோக்கியமாக இருக்க சூரியனுக்கு தினசரி நீர் வார்த்து சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆறாம் வீட்டில் அமரப்போகும் சூரியன், உங்கள் வேலையை கெடுக்க முயற்சிப்பார். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வயிறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். தெரியாத நபர்களுடன் நெருக்கம் பாராட்ட வேண்டாம். குடும்பத்தினரின் உதவியை பெறுவது நல்லது. அநாவசியமாக பேசாமல் வார்த்தைகளைக் கட்டுப்படுத்துவது நல்லது.  

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கனவு இல்லம் நனவாக வழிபட வேண்டிய முறைகள்! எந்த ராசிக்கு என்ன கிரகத்தை வழிபடுவது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

மேலும் படிக்க | கும்ப ராசிக்காரர்களுக்கு இனிமேல் குஷி தான்! ஏழரை சனியில் இருந்து விடுதலை!

Trending News