திருக்கார்த்திகை தீபம் 2022: விளக்கேற்றும் நேரம் மற்றும் முறை
கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும்.
பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
கார்த்திகை விழாவைக் குமராலாய தீபம், சர்வாலய தீபம், விட்டுணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடுவர்.
மேலும் படிக்க | கார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
விட்டுணுவாலய தீபம்: விட்டுணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.
பொதுவாக இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தும் மாதம் என்பதால் தான் கார்த்திகை மாதத்தின் அனைத்து நாட்களும் வீட்டின் வாசலில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்கிறோம்.
அந்தவகையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி, இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபம் ஏற்றும் நேரம்
இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருநாள் டிசம்பர் 06 ம் தேதி வருகிறது. மேலும் திருவண்ணாமலையில் மாலை 5.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம் நடைபெறும். முதலில் விநாயகர், பிறகு முருகன், அவரைத் தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் வர கடைசியாக அர்த்தநாரீஸ்வரர் சொரூபமாக ஆனந்த தாண்டவமாடிய படி இறைவன் காட்சி தருவார்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த அடுத்த நிமிடமே மீண்டும் உள்ளே சென்று விடுவார் அர்த்தநாரீஸ்வரர். அவரின் தரிசனம் கண்ட பிறகு கொடி அசைக்கப்படும். அதை பார்த்த அடுத்த விநாடி, சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
இந்த திருக்காட்சியை பார்த்த பிறகு, 6.05 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். மாலை 6.30 மணிக்குள் வீடுகளில் தீபம் ஏற்றி விட வேண்டும். நமது வீடுகளில் குறைந்தபட்சம் 27 என்ற கணக்கில் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டின் வாசல், நிலை வாசல், வீட்டின் பூஜை அறை, படுக்கை அறை,சமையலறை என அனைத்து இடங்களிலும் முடிந்த வரை தீபம் ஏற்ற வேண்டும்.
மேலும் படிக்க | பொருளாதார ரீதியாக 12 ராசிகளுக்கு 2023 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ