கார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவிருக்கின்றன.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 5, 2022, 08:23 AM IST
  • திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கோலாகலம்
  • சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன
  • ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன
கார்த்திகை தீப திருவிழா - திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் title=

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 6ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்வாக டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். இதைத் தொடர்ந்து மாலையில் பஞ்சமூர்த்திகள் தரிசனம்,அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தை தொடர்ந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீபத்தன்று மலையில் ஏற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த கார்த்திகை தீப திருவிழாவில் ஏராளமானோர் கலந்துகொள்வது வழக்கம். எனவே பக்தர்களுக்கு வசதியாக ஏற்கனவே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இந்நிலையில் சிறப்பு ரயில்களும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படவிருக்கின்றன.

அதன்படி, சென்னை கடற்கரை-வேலூர்-சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்06033/06033) திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னை கடற்கரை-திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிசம்பர் 5ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 7ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை இயக்கப்படும். 

மேலும் படிக்க | ஜெயலலிதா நினைவு நாள் - இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா அஞ்சலி... என்ன நடக்கப்போகிறது?

இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 09.05 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். 

அதே போல் (ரயில் எண் 06115/06116) தாம்பரம் -திருவண்ணாமலை -தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படவிருக்கிறது.

மேலும் படிக்க | ஆளுநர் உடனேயே கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை - தமிழிசை!

மேலும் படிக்க | 4 நாள்களுக்கு மழைதான் - வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் அலெர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News