பித்ரு பக்ஷத்தின் கடைசி நாளான சர்வ பித்ரு அமாவாசை அன்று இந்த சூரிய கிரகணம் நடைபெறுகிறது. பித்ரு பக்ஷத்தில் கிரகணம் ஏற்படுவது அசுபமானதாக கருதப்படுகிறது. சூரிய கிரகணத்திற்கு முன் கன்னி ராசியில் கிரகண யோகம் உருவாகி வருகிறது., செப்டம்பர் 16, 2024 அன்று சூரியன் கன்னி ராசிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், ஏற்கனவே அங்கு கேது கிரகம்  இருப்பதால் கிரகண யோகம் உருவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னி ராசியில் சூரியனும் கேதுவும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளனர். கன்னியில் சூரியனும் கேதுவும் இணையும் சந்தர்ப்பம் கிரகண யோகம் அல்லது கிரகண தோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிலருக்கு மட்டுமே இது யோகமாகவும், பெரும்பாலானவர்களுக்கு இது தோஷமாகவும் மாறும். அக்டோபர் 2ம் நாளன்று சூரிய கிரகணமும் சாதகமானதாக இருக்காது.


சூரியன் கேது இணைப்பு மோசமான பலன்களைக் கொடுப்பது ஏன்?


சூரியன் வேகமாக நகரும் கிரகம் என்பதால் தான், ஆண்டிற்கு ஒருமுறை கேதுவுடன் இணைகிறது. சூரியன், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சரியான கொள்கைகள், சரியான அணுகுமுறை ஆகியவற்றைக் குறிக்கிறது. உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும் சூரியனும், மனபக்குவத்தைக் கொடுத்து ஆன்மீகத்தில் நுழைய ஊக்கப்படுத்தும் கேதுவும் இணைவதால், ஒருவரின் மனம் ஊசலாடும்.


மேலும் படிக்க | புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!


சூரியன்-கேதுவின் இணைவு, பணத்தை பிரதானமாகக் கொண்ட உலகத்தின் மீதான ஈர்ப்பை ஒருபுறம் ஏற்படுத்தினால், மற்றொரு புறம், கேது உங்களை பின் இழுப்பார். வாழ்க்கையில் ஆன்மீகத்தின் மீது வலுவான நாட்டம் ஏற்படுவதும், வாழ்க்கையின் மீதான பிடிப்பு குறைவதும் குடும்ப வாழ்க்கைக்கு நல்லதல்ல.  


சூரியன்-கேது சேர்க்கை
சூரியன்-கேதுவின் இணைப்பு பலருக்கு மோசமானாதாக இருக்கும் என்று சொல்வதற்கு அடிப்படை என்ன? கேது, தலையற்றவராகவும், மாயையாகவும் இருப்பதால், ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் உங்கள் சிந்தனையை தூண்டாது. அதுமட்டுமல்லாமல், சூரியனின் ஆகர்ஷத்தையும் தடுக்கும். சூரியன் உங்களுக்கு கொடுக்கும் உற்சாகத்தையும் மட்டுப்படுத்திவிடும். கன்னியில் சூரியனும் கேதுவும் இணைந்திருப்பதால் மோசமான காலகட்டத்தை அனுபவிக்கும் நான்கு ராசிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்.


மேஷம்: முக்கியமான விஷயங்கள் தொடர்பான முடிவுகளுக்கு மற்றவர்களின் கருத்து தேவைப்பட்டாலும், எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகங்காரம் ஆலோசனை செய்வதைத் தடுக்கும். உறவுகளுடன், குறிப்பாக தந்தை அல்லது தந்தை என குடும்பத்தின் முக்கியமான நபர்களிடம் இருந்தே பிரிவினையை ஏற்படுத்தலாம். மேஷ ராசியினருக்கு கேது சூரியன் இணைவு, வாழ்க்கையில் அதிருப்தியைக் கொடுக்கும்.


மேலும் படிக்க | குரு வக்ரமானால் யாருக்கு பிரச்சனை? மிதுனத்திற்கு செல்வதற்கு முன் இயக்கத்தை நிறுத்தும் குருபகவான் என்ன செய்வார்?


கடகம்: சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை, கடக ராசிக்காரர்களுக்கு மன உலைச்சலைத் தரும். அடையாளம் தெரியாத எதிரிகளால் தொந்தரவு ஏற்படலா. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால், முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கும். கொடுத்த பணம் உரிய நேரத்தில் வந்து சேராது.


கன்னி: சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை கன்னி ராசியில் நடைபெறுவதால் ஏற்படும் கிரகண தோஷமும், சூரிய கிரகணமும் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். அவநம்பிக்கையும் பச்சாதாபமும் உங்களை அலைகழிக்கும். பங்குச் சந்தையில் முதலீட்டைத் தவிர்க்கவும்.


மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சூரியனும் கேதுவும் பாதகமான பலன்களைத் தருவார்கள். திருமணமானவர்கள், தங்கள் திருமண வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளலாம், வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். ஆரோக்கியக்குறைவு ஏற்படலாம்.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இளவரசன் கன்னிக்கு சென்றால் கன்னியருக்கு கொண்டாட்டம் தான்! காதலில் மூழ்கப்போகும் ராசிகள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ