செப்டம்பர் மாதம் முடிந்து அக்டோபார் மாதம் தொடங்கவிருக்கிறது. திங்கட்கிழமை செப்டம்பர் 23 முதல் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 29 வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்களை தெரிந்துக் கொள்வோம். இந்த வாரம் முழுவதும் மாகாளய பட்சத்தில் வருகிறது. எனவே இந்த வார ராசிபலன்கள் மிகவும் முக்கியமானவை.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற கஷ்டப்பட வேண்டியிருக்கும். செய்யும் காரியங்களில் கவனம் வேண்டும். திறமைகளை அங்கீகரிக்க பழகிக் கொள்ளுங்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனமாக இருக்கவும். பெரியவர்களின் அனுபவ அறிவு சேர்ந்த அறிவுரைகள் நன்மைகளைத் தரும் என்பதால் அவர்களை அலட்சியப்படுத்த வேண்டாம்.
ரிஷபம்
மகிழ்ச்சியான செய்திகள் வருவதால், குடும்பத்தில் கலகலப்பான நிலைமை இருக்கும். குடும்பத்தின் மதிப்பு உயரும். எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும்.
மிதுனம்
தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியேறிவருவது நல்லது. தற்பெருமையுடன் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுங்கள், அவர்கள் உங்களை தூண்டிவிட்டு, உசுப்பேற்றாஅம். அது உங்கள் குணநலன்களில் வேண்டாத மாற்றங்களை ஏற்படுத்தும். தொழில், உத்தியோகத்தில் கவனம் செலுத்தவும், அது எதிர்காலத்திற்கு நல்லது.
கடகம்
பிறமொழி பேசுபவர்கள்கிடம் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்கவும். வேலையில் அலைச்சல் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொண்டால் மனதில் கவலைகள் இருக்காது. அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் தொடங்கும் எண்ணம் இருந்தால் ஒத்திப்போடுங்கள்.
சிம்மம்
தன்னம்பிக்கை பெருகும், வியாபாரத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகளை முடித்துவிட்டு, பெருமூச்சு விடும் நேரம் இது. காரியத்தடை மற்றும் தாமதங்கள் ஏற்படுத்திய கவலைகள் நீங்கும். எதிர்பாராத விஷயங்களால் மனசஞ்சலம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு வாழ்க்கையில் வசந்தகாலம் என்று சொல்லலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், பிணக்குகள் தீரும். உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன், உள்ளத்திலும் உடலிலும் உற்சாகம் துள்ளும்.
துலாம்
தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் சார்ந்த வேலைகள் தாமதமாகிக் கொண்டே செல்வது மனதில் கவலைகளை ஏற்படுத்தும், எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றாலும், அதிருப்தியும் இருக்கும்
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியங்கள் சட்டென்று முடியாமல் இழுத்துக் கொண்டே போகும். தாழ்வு மனப்பான்மையோ அல்லது மனவருத்தமோ ஏற்பட வய்ப்புண்டு. மொத்தத்தில் இந்த வாரம் மனதில் கவலைகள் அதிகரிக்கும், தொழிலிலும் போட்டி அதிகரிக்கும்.
தனுசு
அனைத்து விஷயங்கலிலும் ஆர்வம் அதிகரிக்கும். அரசு தொடர்பான விஷயங்களில் தாமதம் ஏற்படும். கடினமான வேலைகள் எளிதில் முடியும் என்ற மகிழ்ச்சியடைந்தால், சுலபமான வேலைகள் இழுத்தடிக்கும்.
மகரம்
தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியக்குறைவு செலவை இழுத்துவிடும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.
கும்பம்
நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றும் காலம் இது. குடும்பத்தினரின் உண்மையான நிலையும் அவர்கள் உங்கள் மீது வைத்துள்ள பாசமும் வெளிப்படும். இது மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
மீனம்
இந்த வாரம் ஏற்படும் அனுபவங்கள் வாழ்வைப் பற்றிய புதிய சிந்தனையையும் கோணத்தையும் ஏற்படுத்தும். குடும்பத்தினரிடையே புரிதல் உண்டாகும். சொத்து வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ