புரட்டாசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு பவர் அதிகமா? காக்கும் பெருமாளை வணங்கும் சிறப்பு சனிக்கிழமைகள்!

Purattasi Sani Fasting : புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் நல்லது என்று சொல்வார்கள். அதற்கு காரணம், புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனீஸ்வர பகவான் பிறந்ததாக நம்பப்படுகிறது

திருப்பதி பெருமாளின் தீவிர பக்தரான முதியவருக்கு பெருமாள் காட்சி கொடுத்து ஆட்கொண்டதும் ஒரு புரட்டாசி சனிக்கிழமையில் தான்...

1 /9

சனீஸ்வரர் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவகிரகம். சனிக்கிழமை அவருக்கு உரிய நாள். எல்லா சனிக்கிழமைகளிலும் சனீஸ்வரரின் கோவிலில் கூட்டம் அலைமோதும்...

2 /9

ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே நவகிரகமான சனீஸ்வரருக்கு உரிய நாளான சனிக்கிழமைகள், புரட்டாசி மாதம் மட்டும் பெருமாளின் வழிபாட்டிற்குரியது

3 /9

காக்கும் கடவுளை வழிபடும்போது, அவரின் அனுக்கிரகம் கிடைத்தால், சனீஸ்வரரின் தொல்லைகள் நீங்கிவிடும்

4 /9

சனீஸ்வரர் தெய்வங்களுக்கு கட்டுப்பட்டவர். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவரவர் வினையை அனுபவிக்க வேண்டியிருக்கும். அதில், சனியின் பிடியில் இருக்கும்போது தான் கஷ்டங்களை அனுபவிக்கும் காலம் வரும்

5 /9

கர்மவினைகள் ஒருபுறம் என்றால், பக்தனுக்கு அனுகிரகம் செய்யும் பெருமாளின் கடைக்கண் பார்வை பட்டாலே, அனைத்து வினைகளும் அறுபடும் என்பதால், புரட்டாசி சனியில் பெருமாளை வணங்கினால் போதும்

6 /9

புரட்டாசி சனியில், பெருமாளின் அனுக்க சேவகர் ஹனுமனை வழிபடலாம்

7 /9

விக்னங்களை போக்கும் விக்ன விநாயகர் வழிபாடு பெருமாளின் கருணையை கொண்டு வந்து சேர்க்கும்

8 /9

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது என்பது நமது மரபாக இருந்தாலும், தண்ணீரை தானமாகக் கொடுத்தால் நமது வினைகள் அகலும்

9 /9

பொறுப்புத்துறப்பு: பாரம்பரிய நம்பிக்கைகள், தொன்றுதொட்டு தொடரும் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது