ஷஷ ராஜயோகம் 2023: ஜோதிட சாஸ்திரப்படி ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட நேரத்தில் தன் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அதிலும் சனி கிரகமானது இரண்டரை ஆண்டுகளில் மிகக் குறைந்த வேகத்தில் தனது ராசியை கடக்கிறது. இதனுடன், நீதியின் கடவுளான சனி, செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். அதனால்தான் சனியின் ஸ்தானத்தின் பலன் அதிகபட்சமாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும் என்பார்கள். அந்தவகையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி, திருக்கணித பஞ்சங்கத்தின் படி, சனி கும்பத்தில் பெயர்ச்சியாகி, மார்ச் 2025 வரை கும்பத்தில் தொடர்ந்து சஞ்சரிப்பார். இதற்கிடையில் வரும் ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.56 மணிக்கு சனி வக்ர பெயர்ச்சி அடையப் போகிறது. இந்த சனியின் வக்ர இயக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் ஷஷ ராஜயோகம்


சனியின் வக்ர பெயர்ச்சியால் ஷஷ ராஜயோகம் உருவாகிறது. அதன் பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் இந்த ஷஷ ராஜயோகத்தால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். இவர்களுக்கு இந்த காலத்தில் செல்வம் மற்றும் கௌரவம் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன்..! 4 ராசிகளுக்கு ஜாக்பாட்


வக்ர சனி இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்க வைக்கும்


சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு வக்ர சனி சுப பலன்களைத் தருவார். அதிக லாபம் கிடைக்கும். திடீரென்று எங்கிருந்தாவது பணம் கிடைக்கும், அது உங்கள் வங்கி இருப்பை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நல்லுறவு உருவாகும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். தனியாக இருப்பவர்களுக்கான தேடல் முடிவுக்கு வரும், நீங்கள் விரும்பியவாரு உங்களுக்கு ஏற்ற துணையை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் செயல்திறன் இப்போது நன்றாக இருக்கும் என்பதால், இப்போது பதவி உயர்வுடன் சேர்த்து இன்க்ரிமென்ட், அதாவது ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 


விருச்சிக ராசி: வக்ர சனியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களைத் தரும். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. வீடு-நிலம், வாகனம் வாங்கலாம். லாபகரமான ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். எங்கிருந்தாவது திடீரென்று பணம் கிடைக்கும். குடும்பத்துடன் இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். பயணங்கள் செல்வதால் அதிக செலவு ஏற்படும். 


கும்ப ராசி: கும்ப ராசியிலேயே சனி இருப்பதால் ராஜயோகம் உண்டாகும். இந்த ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய பலன்களைத் தரக்கூடும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிறுத்தப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். ஆளுமை மேம்படும், மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வரும் 139 நாட்கள் நஷ்டம், கஷ்டம்.. கவனம் தேவை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ