இன்றைய ராசிபலன் : ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அள்ளி கொட்டப்போகுது! யாருக்கு தெரியுமா?
Latest Tamil Rasipalan Today : 12 ராசிகளுள், அவரவரின் கிரகப்பலன்களுக்கு ஏற்ப சிலருக்கு வாயிற்கதவை தேடி அதிர்ஷ்டம் வந்து கொட்டலாம். இன்று அப்படி எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்பாேகுது தெரியுமா?
Latest Tamil Rasipalan Today : அனைவருக்கும் அவரவர்களின் கிரகப்பலன்களை பொறுத்து அந்த நாளுக்கான ராசி பலன்கள் அமையும். அந்த வகையில், இன்று யார் யாருக்கு என்னென்ன பலன் என்று பார்ப்போமா?
மேஷம்:
முக்கியமான விஷயத்திற்காக பனத்தை சேமிக்க முயற்சி செய்வீர்கள். சிலர் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். வேலை பார்க்கும் இடத்தில் சிலருக்கு நல்ல பெயர் கிடைக்கலாம். தூரத்து உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். குடும்பத்துடன் உல்லாசப் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். முன்னர் முதலீடு செய்தது, தற்போது லாபம் தரலாம்.
ரிஷபம்:
இன்று உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். சிலர் வேலை ரீதியாக புதிய மனிதர்களை சந்திக்க நேரிடும். நெடுந்தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையலாம். சிலர், தங்களுக்கு முக்கியமான ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உங்கள் உதவியை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வீர்கள். சொத்து தொடர்பான நிலுவையில் இருந்த வேலை விரைவில் முடிவு பெற வாய்ப்புள்ளது.
மிதுனம்:
நிலம் வாங்கி வைத்திருப்பவர்கள் அதில், வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலை தொடர்பாக வெளிநாடு பறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பல வழிகளில் பண வரவு காத்திருக்கிறது. இன்று உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு காதல் கைகூட வாய்ப்புள்ளது.
கடகம்:
வேலை செய்யும் இடத்தில் அனைவரும் உங்களுக்கு உதவி புரிவர். திடீர் நிதி வரவுக்கு வாய்ப்புண்டு. உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை பெருமைப்படுத்தும் செயலில் ஈடுபடுவர். இன்று உங்கள் வாழ்வில் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்புகள் வரலாம். அன்புக்குரியவர்கள் இன்று உங்களுடன் நேரம் செலவிடுவர்.
சிம்மம்:
தொழிலிலும் வேலை பார்க்கும் இடத்திலும் போட்டி நிலவலாம். ஒருவரிடம் கடனாக கொடுத்த தொகையை திரும்ப வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். மகிழ்ச்சியாக மனநிலையை உணருவீர்கள். கலை துறையில் இருப்போருக்கு நல்ல வாய்ப்பு கைகூடி வரலாம்.
கன்னி ராசி:
தொழிலில் போட்ட முதல், இரட்டிப்பாகி சிலருக்கு கைக்கு வரலாம். ஏதேனும் விலை உயர்ந்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் உடல் நலனில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்படும். மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வில் இன்று கலந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் உயர் அதிகாரி இன்று உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வார். ஒரு சிலருக்கு இன்று தன வரவு தாராளமாய் இருக்கும்.
துலாம்:
உங்களது ஒரு செயலால் குடும்பத்தினர் பெருமை படுவர். ஒரு சிலருக்கு நெடுந்தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எதிலாவது முதலீடு செய்ய நினைப்பவர்கள், கவனத்துடன் செயல்படவும். ஒரு சிலருக்கு அவர்கள் பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு கேள்விக்கும் பதில் கிடைக்கலாம்.
விருச்சிகம்:
சிலருக்கு இன்று அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படும். முன்னர் செய்த நல்ல செயல்கள், இன்று இரட்டிப்பாக அன்பை தரும். திடீர் பயணங்களுக்கு வாய்ப்புகள் உண்டு. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் வந்து சேரும். வீட்டிலும், நீங்கள் செல்லும் இடங்களிலும் உங்களை பார்ப்பவர்கள் அன்பாக நடந்து கொள்வர்.
தனுசு:
வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரலாம். வீட்டில் புதிதாக சில பொருட்களை வாங்கி வைப்பீர்கள். சிலருக்கு சொத்துகளை வாங்கும் அனுகூலம் உண்டு. சுய தொழில் தொடங்கியிருப்பவர்களுக்கு இன்று நல்ல லாபம் கிடைக்கலாம். நீங்கள் வெகு நாட்களுக்கு முன்பு கொடுத்த கடன் தொகை இன்று உங்களை வந்து சேரலாம்.
மேலும் படிக்க | பாடாய் படுத்துவார் புதன்... சில ராசிகளுக்கான பலன்களும்... பரிகாரங்களும்!
மகரம்:
சிலருக்கு இன்று நல்ல தொடக்கத்திற்கான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களை சுற்றி நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சிலர், தங்கள் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். சிலர், மாநிலம் தாண்டி பயணிப்பீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்காக சிலர் பொருட்களை வாங்குவீர்கள். மனதில் வெற்றி என நினைத்து இறங்கும் காரியங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
கும்பம்:
திடீர் வருமானம், திருப்புமுனையை ஏற்படுத்தலாம். வீட்டில் பெரியவர்கள் அல்லது வாழ்க்கை துணையிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். அன்புக்குரியவருடன் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். சில முடிவுகளை எண்ணி வருத்தப்பட வாய்ப்புண்டு. வேலை செய்யும் இடத்தில் விட்டுப்போன காரியங்களை முடிப்பீர்கள்.
மீனம்:
உடல் நலனில் கடந்த சில நாட்களாக அக்கறை செலுத்துவதால் அதற்கான பலன்கள் கைமேல் கிடைக்கும். படித்துக்கொண்டிருப்பவர்களுக்கு உங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு சாலை வழி பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. சொத்து வாங்குவது தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனி... 2025 இந்த ராசிகளுக்கு சிக்கலான ஆண்டு... சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ