இரண்டு ஆற்றல் மிக்க கிரகங்களான சந்திரன் சனி இணைந்தால் ஏற்படுவது புனர் பூ தோஷம் ஆகும். இந்த தோஷம், பிரபலமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த தோஷம், யோகமாக மாறும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தில் ஈடுபட்டிருப்பவர்களின் ஜாதகத்தில் சந்திரன்-சனி ஆகிய இரு கிரக சேர்க்கை இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றால் அல்லது நேர்பார்வை பெற்றாலோ புனர்ப்பு தோஷம் அல்லது புனர் பூ தோஷம் ஏற்படுகிறது.


புனர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் நிம்மதியற்ற வாழ்க்கை அமையும். பொதுவாக பார்க்கப்போனால், பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுபவர்களுக்கு சொந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இது, குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.


சந்திரன் மாதுர்காரகன், அதாவது தாய், தாய்வழி உறவுகளுக்கு காரணகர்த்தா. மனோகாரகன் என்று சொல்லும் சந்திரன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் பாதிப்பது மனம்தான். முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்கும் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுதான் ஒருவரின் ஜனன ராசி ஆகும்.


மேலும் படிக்க | எமபயம் போக்கி ஆயுளை நீட்டிக்கும் பெளர்ணமி வழிபாடு! எந்த தெய்வத்தை வழிபடலாம்?


அனைவருக்குமே இந்த புனர் பூ தோஷம் பிரச்சனையை கொடுக்குமா? குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்துமா என்று கேட்டால், அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சொல்லலாம். சிலருக்கு திருமண தடை ஏற்படும். புனர்ப்பு தோஷம் சில சமயங்களில் யோகமாக மாறி,  சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ உயர்த்திவிடும். 


சனி மற்றும் சந்திரன் இரு கிரகங்களும் சேர்வது, இரு கிரகங்களும் கிரக பரிவர்த்தனை செய்வது, சப்தாம்ச பார்வை மற்றும் சார பரிவர்த்தனை அனைத்துமே புனர்ப்பு அமைப்புதான். புனர்ப்பு அமைப்பு இருப்பவர்கள் தொட்டதற்கெல்லாம் குறை சொல்பவர்களாகவும், பிறரின் குறைகளை பூதக்கண்ணாடி வைத்து பேசுபவர்களாகவும். இருப்பார்கள்.


சனி மெதுவாக நகரும் கிரகம் என்றால்,சந்திரன் வேகமாக நகரும் கிரகம். சுறுசுறுப்பான கிரகம், மந்தமான கிரகத்துடன் தொடர்பு ஏற்படும்போது, அதன் இயக்கமும் மெதுவாகிவிடும். புனர்ப்பு தோஷம் ஜனன ஜாதகத்திற்கு மட்டுமே கோச்சார விதிகளுக்கு பொருந்தாது. ஒரு ஜாதகத்தில் ஒரு ராசியில் சந்திரன், சனி சேர்க்கை பெற்றிருக்கும் போது குரு பார்வையோ, சேர்க்கையோ பெற்றிருந்தால் புனர் பூ தோஷம் என்பது இல்லை என்று ஆகிவிடும்.


அதேபோல, குருவின் வீடான தனுசு மற்றும் மீன ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் புனர்ப்பு தோஷம் இல்லை. பொதுவாக
புனர்ப்பு தோஷம் இருப்பவர்களுக்கு அதிக தயக்கம் இருக்கும். அதுவே, ஜாதகத்தில் 4,10,11 ஆகிய வீடுகளில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டால் புனர்ப்பு தோஷம் புனர் பூ யோகமாகி ராஜயோகம் ஏற்படும்.


சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இயல்பாகவே வந்துவிடும். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக வேலை செய்வார்கள். அதேபோல, சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் துறவறம் மேற்கொள்வதும், குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதும் இயல்பானதாக இருக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ