நவகிரகங்களிலேயே மிகவும் மெதுவாக இயங்கும் கிரகமான சனி பகவான் ராசிக்கு இரண்டரை ஆண்டுகள் என ஒரு சுற்றுக்கு 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். ராசியிலிருந்து எந்த இடத்தில் உள்ளார் என்பதைப் பொருத்து சனியின் காலங்கள் அறியப்படுகின்றன. அதாவது ஒரு ராசியில் இருக்கும்போது சனீஸ்வரரை ஜென்ம சனி என்று அழைப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜென்ம சனி


தற்போது, கும்ப ராசியில் சனீஸ்வரர் சஞ்சாரம் செய்வதால் அந்த ராசிக்காரர்களுக்கு தற்போது ஜென்ம சனி காலமாகும். ராசி நாதன் சனி பகவான் 2025ஆம் ஆண்டு வரையில் கும்பத்தில் அமர்ந்து ஆட்சி செய்வதால் இந்த ராசிக்கு ஜென்ம சனி இருப்பதாக சொல்வார்கள்.  


விரயச் சனி


ஒருவரின் ராசிக்கு 12ஆம் வீட்டில் சனி வரும் போது அவர் விரயச் சனி என்று அழைக்கப்படுவார்.


பாத சனி
ராசிக்கு 2ம் வீட்டில் சனீஸ்வரர் இருந்தால் அப்போது சனீஸ்வரர் பாத சனி என்று அறியப்படுகிறார். 


ஏழரைச் சனி


ஜென்ம, விரய மற்றும் பாத சனி மூன்றும் தலா இரண்டரை ஆண்டுகள் என மூன்றையும் சேர்த்த  7.5ஆண்டுகள ஏழரை சனி என்று அழைக்கப்படுகிறது.


மேலும் படிக்க | இதயக் கோளாறைத் தரும் சூரியனின் ஆதிபத்தியம்! எலும்பு & கண் பிரச்சனைக்கும் காரணம் சூரியனே!!


கண்டச்சனி


சனி பகவான் ராசிக்கு 7ம் வீட்டில் அமரும் போது கண்டச்சனி என்று அழைக்கப்படுகிறார். 


அஷ்டமச் சனி


ராசிக்கு 8ஆம் வீட்டில் சனீஸ்வரர் இருந்தால் அவர் அஷ்டமத்து சனியாக அறியப்படுகிறார்.


அர்த்தாஷ்டம சனி


ராசியின் நான்காம் வீட்டில் அமரும் போது சனீஸ்வரரை அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கிறோம். 


யோகத்தை கொடுக்கும்/கெடுக்கும் சனி


இருக்கும் இடத்தைப்பொருத்து பலன்களைத் தரும் சனி பகவான், அஷ்டம சனியாக இருக்கும்போது பொதுவாகவே தீய பலன்களையே அதிகமாகத் தருவார். அதேபோல ஜென்ம சனி காலத்தில் கொஞ்சம் பாடுபடுத்துவார் சனீஸ்வரர். 


தற்போது, கும்பத்தில் சனீஸ்வரர சஞ்சரிப்பதால் கும்ப ராசிக்கு ஜென்ம சனியாகவும், மகர ராசிக்கு பாத சனியாகவும், மீன ராசிக்கு விரய சனி ஆகவும் இருக்கிறார் சனீஸ்வரர்.


அதேபோல, சிம்ம ராசிக்கு கண்டச் சனியாகவும், கடக ராசிக்கு அஷ்டம சனி ஆகவும், விருச்சிக ராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் இருந்து தனது நீதிபரிபாலனத்தை செய்து கொண்டிருக்கிறார். 


இவற்றைத் தவிர, சனீஸ்வரர் ஒரு ராசியில் இருப்பதைப் பொறுத்து பலன்களைத் தருவார். ஐந்தாம் இடத்தில் சனி இருந்தால், அந்த ஜாதகர் மிகவும் வைராக்கியம் உடையவராகவும், வம்பு சண்டைக்கு போகமாட்டேன், வந்த சண்டையை விடமாட்டேன் என்று சொல்பவராக இருப்பார்.


மேலும் படிக்க | வாழ்க்கையை தீர்மானிக்கும் ராசிகளைப் பற்றி ‘இந்த’ விஷயம் தெரியுமா? ’ராசிகள்’ ஆதி முதல் அந்தம் வரை!


அதேபோல, பத்தாம் இடத்தில் இருக்கும் சனீஸ்வரர், இளைஞர்களுக்கு தொழிலில் நஷ்டத்தையும், பணியில் பிரச்சனைகளையும் கஷ்டத்தையும் கொடுப்பார். அதேபோல வயது அதிகமான பிறகு உயர்வைக் கொடுப்பார்.  அதாவது இளம் வயதில் பத்தாம் இடத்து சனி உயர்வை கெடுத்து, முதிய பருவத்தில் உயர்வைக் கொடுப்பார்.


ஒருவர் ஜாதகத்தில் பணிரெண்டாம் இடத்தில் சனீஸ்வரர் இருந்தால், வருமானத்திற்கு மேல் செலவுகளை செய்ய வைபபர் சனீஸ்வரர். 12ம் பாவகத்தில், சனி செவ்வாய் பார்வை பட்டால், அந்த நபர் குடும்பம் நடத்தும் தகுதியை இழப்பார்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | ஆடி மாத சிவ வழிபாடு வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள்! சிவனுக்கு பிடித்த சாவன் அபிஷேகங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ