புதுடெல்லி: வாழ்க்கையில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் தவறுகளுக்கான பலன்களையும் நாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. சரி எது தவறு எது, நீதி நியாயம் எது என தெரிந்து நடந்துக் கொண்டால், நம்மால் பிறருக்கும் துன்பம் ஏற்படாது. நாமும் தவறுகள் செய்யாமல் மனதில் வருத்தமும், கர்மவினைகளும் அணுகாமல் நிம்மதியுடன் இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேத ஜோதிடத்தில் சனி கிரகத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்றவர், நமது நன்மைக்கும் தீமைகளுக்கும் ஏற்றாற்போல பலன்களை வழங்குகிறார். எனவேதான், சனீஸ்வரரை நினைத்தால் பலருக்கும் பயம் ஏற்படுகிறது.


சனீஸ்வரருக்கு பிடிக்காத சில விஷயங்களை தவிர்க்கச் சொல்வதுபோல, அவருக்கு பிடித்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து அவற்றை வழக்கமாக்கிக் கொண்டால் நிம்மதியாக வாழலாம். சனி பகவானுக்கு பிடித்த செயல்கள் என்றால், நீதி வழுவாமல் தர்மத்துடன் வாழ்வதற்கான வழிகள் என்று பொருள் கொள்ளவேண்டும்.


மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்கள் 


சனி பகவான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க கடைபிடிக்க வேண்டிய வழக்கங்கள்
இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், சனி தேவன் உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்ய மாட்டார் என்பதுடன், அவருடைய ஆசீர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும். எந்தவொரு நெருக்கடியிலும், அவர் உங்களுக்கு துணையாக இருந்து வழி காட்டுவார்.


நீதிக்கு அதிபதியான சனியின் தாக்கம் உடனே தெரிவதில்லை. சனியின் கோபப்பார்வை நம்முன் விழுவதற்கு முன்னதாக, சில பழக்கங்களை மாற்றிக் கொண்டால்,சனியின் தோஷங்களைத் தவிர்க்கலாம்.


நன்கொடை


ஏழை, எளியோர்ரைப் பார்த்து மனம் உருகுபவர்கள், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் மிது சனி தேவன் விசேஷ கருணை காட்டுவார். எள், உளுந்து, வஸ்திரம் ஆகியவற்றை மனப்பூர்வமாக ஏழைகளுக்கு தானமாக அளித்தால், சனிபகவான் உங்களை எப்போதும் ஆசீர்வதிப்பார்.


குடை தானம் செய்வது சனிக்கு பிடித்தமானது. வெயில் மழையிலிருந்து பாதுகாக்கும் குடையை தானமாகக் கொடுத்து, சனி தேவரின் அருட்குடைக்குள் அடைக்கலமாகுங்கள்.  



நாய்கள் மீது அன்பாக இருப்பவர்கள் மற்றும் அவற்றுக்கு உணவு இடுபவர்கள் மீது சனி பகவானின் கருணைப்பார்வை விழும்.நாய்களை நேசிப்பவர்களை சனீஸ்வரர் அரவணைக்கிறார்.


கண்ணற்றோருக்கு உதவுபவர்களுக்கு நல்வாழ்வை அருள்வார் சனி தேவர்.  


சனிக்கிழமை விரதம் இருந்து அன்னதானம் செய்பவர்கள் மீது சனீஸ்வரரின் அன்பு நீடித்து நிலைக்கும்.


மீன்களுக்கு தீவனம் கொடுப்பது சனிதோஷத்தையே நிவர்த்தி செய்யும். உங்களுக்கும் மீன்களுக்கு மீன் உணவளிக்கும் பழக்கம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி, இந்த பழக்கம் உங்களை காப்பாற்றும்.


சுத்தம் மற்றும் சுகாதாரமாக இருப்பவர்களுக்கு சனிபகவான் அருள்பாலிக்கிறார். சனி எப்போதும் தூய்மையானவர்களுக்கு உதவுவார்.


துப்புரவுப் பணியாளர்களை மதித்து அவர்களுக்குப் பண உதவி செய்பவர்களின் மேல் சனீஸ்வரரின் கருணைப்பார்வை விழும்.  


மேலும் படிக்க | 141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க


ஆதரவற்றோர், கஷ்டப்படுபவர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு இயன்றவரை உதவி செய்பவர்கள் சனி தேவருக்கு மிகவும் பிடித்தமானவர்கள். அவர்களின் எல்லா கஷ்டங்களையும் போக்கும் சனிபகவானின் மனம் குளிரும்.  


வயதான பெற்றோர் மற்றும் பெண்களை மதிக்கும் நபர்களுக்கு சனீஸ்வரர் எப்போதும் உதவுவார்.


சனி பகவானை மகிழ்விக்க மரங்கள் நடுவதும், மரங்களை வழிபடுவதும் மிகவும் முக்கியம். ஆலமரம் மற்றும் அரச மரத்தை வழிபடுபவர்களுக்கு சனிதேவர் தனது ஆசிகளை வழங்குகிறார்.


சிவன் வழிபாடு சனியை மகிழ்விக்கும். சிவலிங்கத்திற்கு நீராடி வழிபாடு செய்பவர்களை சனீஸ்வரர் துன்பப்படுத்த்மாட்டார். 


தங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் செய்பவர்களிடம் சனி பகவான் கருணையுடன் நடந்துக் கொள்வார். எனவே இந்த பழக்கத்தை எப்போதும் கடைபிடியுங்கள்.


மேலும் படிக்க | இந்த ராசியில் சனி 6 மாதங்கள் இருப்பார்


யாரையும் துன்புறுத்தாமல் நேர்மை மற்றும் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு வரத்தை சனி வழங்குகிறார். வட்டித்தொழில் செய்பவர்கள் மீது சனிக்கு கோபம் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.


சனி பகவான் அடுத்த மாதம் ஜூலை 12 முதல் வக்ர கதியில் நகரவிருக்கிரார். அப்போது அவருடைய அருட்பார்வையை பெற, அவருக்கு பிடிக்காததை தவிர்த்து, அவரை மகிழ்விக்கும் செயல்களை செய்யுங்கள்.


சனிக்கிழமையன்று குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து சனிபகவானை வணங்கவும். நல்லெண்ணை தீபம் ஏற்றி சனீஸ்வரரை வணங்குவது அவருக்கு பிடித்தமானது. அதேபோல, அரச மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சனீஸ்வர பகவானை வணங்குபவர்களின் மகிழ்ச்சிஇரட்டிப்பாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | 141 நாட்கள் சனி வக்ர பெயர்ச்சி, இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR