சிவபெருமானை வணங்கும் வழக்கம் இந்தியாவில் தொன்மையானது. மும்மூர்த்திகளில் முதல்வரான சிவபெருமான் சைவ சமயத்தின் முதல்வர். சிவனை பல்வேறு விரதங்கள் வைத்து வழிபட்டாலும், சிவனுக்கு உரிய விரதங்களில் முதன்மையானது மகாசிவராத்திரி விரதம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவனுக்கு உரிய விரதங்கள்


சிவராத்திரியைத் தவிர சிவபெருமானுக்குரிய விரதங்கள் என்றால், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிஷப விரதம் இவற்றை சொல்லலாம்.


விரத பலன்


சிவபெருமானை நினைத்து வழிபாடுகளை மேற்கொண்டால் இம்மை மற்றும் மறுமைகளில் நற்கதியை பெறுவதோடு முக்தியும் கிடைக்கும்.


பிரதோசம்


இன்று புரட்டாசி மாத பிரதோச விரதம் அனுசரிக்கப்படும் நாளாகும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசையிலிருந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசியில் கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதோச நாளில் மாலை 4.00மணி முதல் 7.00வரை உள்ள நேரத்தில் பூஜைகள் செய்ய வேண்டும்.


விரதம் அனுசரிப்பு


 அதிகாலையில் நீராடி சிவனை வழிபட்ட பிறகு, நாள் முழுவதும் உபவாசம் மேற்கொண்டு, இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பது நல்லது. மாலை வேளையில் சிவாலயத்தில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துக் கொண்ட பிறகு, இரவு உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்யலாம்.


மேலும் படிக்க | செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள்! பணம் புகழ் பெறும் லக்கி ராசிகள்!


பிரதோஷ விரத பலன்கள்


வாழ்வின் பாவங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்க உதவும் பிரதோஷ விரத்தத்தை தொடர்ந்து மாதந்தோறும் கடைபிடிப்ப்பதால் அறிவுத்திறன் மேம்படும். நினைவாற்றல் பெருகும். கடன், வறுமை, நோய், அகாலமரணம், பயம், மரண வேதனை ஆகியவை நீங்கும்.


இன்று புரட்டாசி மாத பிரதோஷம், இன்று அபிஷேகப்பிரியரான சிவனுக்கு செய்யும் அபிஷேகங்கள் நல்ல வாழ்க்கையை அமைத்துத் தரும் என்பது ஐதீகம். வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும் தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் சிவனை வழிபடுவது வழக்கம். பிரதோஷ வேளையில் தேவர்களும் சிவன் விஷ்ணு பிரம்மா என அனைவரும் சிவ சந்நிதியில் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.


பிரதோஷ காலத்தில்தான் இறைவன் ஆனந்தக் கூத்தாடி தேவர்களைக் காத்தார் என்பதால், பிரதோஷ வேளையில் சிவதரிசனம் செய்வது சிறப்பு. பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடனும் வறுமையும் நீங்கி வளமான வாழ்க்கை வாய்க்கு. அத்துடன் பிரதோஷ நாளில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் என சிவனுக்குப் படையலிட்டு அன்னதானம் செய்தால் வாழ்க்கை வளம் பெறும்.


சிவ பெருமான், ஆலகால விஷத்தை உண்டு, தேவர்களையும், உலக உயிர்களையும் காத்தருளிய காலமாக கருதப்படுவதால் பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.


பிரதோஷ காலத்தில் நரசிம்மர் வழிபாடு
பிரதோஷம் என்றாலே சிவ வழிபாட்டிற்கான நாள் என்றாலும், பிரதோஷத்தன்று நரசிம்மரை வழிபடுவதால் வாழ்க்கையே மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தூணில் இருந்து வெளிப்பட்டு வந்த நரசிம்மர், பிரகலாதனுக்காக , இரண்யனை வதம் செய்தார். வதம் முடிந்தபிறகு, கோபம் தணிந்து, நரசிம்மர் சாந்தமூர்த்தியாக மாறி அருள் செய்தது பிரதோஷ காலத்தில் தான். எனவே, பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவது நல்லது.


மேலும் படிக்க | புரட்டாசி சோமவாரத்தில் சிவனை பூஜித்தால் வாழ்க்கை வசந்தம்! திங்கட்கிழமை வழிபாடு மகத்துவம்...


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ