செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள்! பணம் புகழ் பெறும் லக்கி ராசிகள்!

October Month Mangal Gochar : அக்டோபர் 20ம் தேதி வரை மிதுன ராசியில் பயணிக்கும் செவ்வாய் தீபாவளிக்கு முன்னதாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.... அதுக்கப்புறம் இந்த 4 ராசிகளுக்கு ஜாலி தான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 15, 2024, 04:26 PM IST
  • அக்டோபர் 20 செவ்வாய் பெயர்ச்சி
  • எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம்?
  • கடகத்தில் செவ்வாய் 6 ராசிகளுக்கு அருமை...
செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள்! பணம் புகழ் பெறும் லக்கி ராசிகள்! title=

Mars Transit 2024 October : கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் கிரகம் ஒரே ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் கிரகம் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிதுன ராசிக்கு  பெயர்ச்சி அடைந்தார். இன்னும் ஐந்து நாட்களுக்கு அதாவது அக்டோபர் 20ம் தேதி வரை மிதுன ராசியில் பயணிக்கும் செவ்வாய் தீபாவளிக்கு முன்னதாக கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியால், சுப பலன்கள் சிலருக்கு என்றால், பலருக்கு அசுப பலன்கள் ஏற்படும். செவ்வாயின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அருமையான காலம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி ஆகும்போது, பல ராசிக்காரர்கள் பெரிய அளவில் பலன் அடைவார்கள் என்றால், அதில் முதல் ராசி கடகமாக இருக்கும்.. மேலும் பல ராசிக்காரர்கள் வெற்றி அடைவார்கள். எந்த ராசியினருக்கு பணப் பிரச்சனையில் இருந்து முக்தி கிடைக்கும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். செவ்வாய் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம்? தெரிந்துக் கொள்வோம்...

மேலும் படிக்க | கும்பத்தில் வக்ரகதியை மாற்றும் சனீஸ்வரர்! நாலு ராசிகளுக்கு நல்லது செய்யப்போகும் சனியின் வக்ரநிவர்த்தி

மேஷம்

செவ்வாய் மாற்றத்தால் மன அழுத்தம் குறையும். நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த மன உளைச்சல் மற்றும் சிரமங்கள் நிவர்த்தியாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது நிம்மதி கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். சச்சரவுகளை முடிவுக்கு கொண்டுவந்து உறவுகளில் இனிமையை ஏற்படுத்த இது நல்ல நேரம்.

ரிஷபம்
குடும்பத் தகராறு, சொத்து தொடர்பான வழக்குகளில் சிக்கியிருந்த ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தற்போது சாதகமான காலம். அலுவலகத்தில் வேலையுடன், உங்கள் படைப்பாற்றலும் அதிகரிக்கும், இது புதிய உயரங்களை அடைய வாய்ப்பளிக்கும்.

மிதுனம்
செவ்வாய் மாற்றம் மனதளவிலும், உடலளவிலும் நிம்மதியைத் தரும். கடந்த சில மாதங்களாக இருந்த பதற்றம் குறையும். தலைவலி அல்லது தூக்கப் பிரச்சனைகள் என ஆரோக்கியக் குறைவுகள் அனைத்தும் சரியாகிவிடும். பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரமாக இருக்கும்.

கடகம்
அறிவையும் திறமையையும் அதிகரிக்க விரும்பும் கடக ராசிக்காரர்களுக்கு இதுவே சரியான நேரம். தொழில்முறை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம். மருத்துவம் அல்லது எம்பிஏ துறையில் உள்ளவர்களும் இந்த நேரத்தில் பலன்களைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News