சுக்கிரன் பெயர்ச்சி இன்று: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, குபேர யோகம்
Venus Transit 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். அதன்படி இன்று அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி சுக்கிர பெயர்ச்சி அடையப் போகிறார். இது 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
சுக்கிர பெயர்ச்சி பலன்கள் 2024: ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். இந்த கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொரு முறையும் சுக்கிரன் தனது ராசியை மாற்றும் போதெல்லாம், அது சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 12 ஆம் தேதி திங்கட்கிழமை, சுக்கிரன் சனியின் சொந்த ராசியான மகர ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், மகிழ்ச்சி, ஆகியவை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, லட்சுமி தேவியின் மிகவும் சிறப்பான ஆசி இந்த ராசிக்காரர்களிடம் இருக்கும். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சுக்கிரன் பெயர்ச்சியின் சுப பலன் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்?
மேஷம் (Aries Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும். இந்த ராசிக்காரர்கள் பெரும் நிதி ஆதாயத்தையும் நன்மைகளைப் பெறலாம். முதலீடு செய்வதன் மூலம் எதிர்பாராத நல்ல லாபத்தை நீங்கள் பெறலாம். மேஷ ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை மேஷ ராசிக்காரர்ககள் பெறுவார்கள். லட்சுமி தேவியின் முழுமையான அருளை நீங்கள் பெறலாம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): சுக்கிரனின் ராசி மாற்றம் அதாவது சுக்கிர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்குப் பல தரப்பில் இருந்து நன்மைகள் மட்டுமே உண்டாகும். மிதுன ராசிக்காரர்கள் தங்களின் உத்தியோகத்தில் முன்னேற வாய்ப்புகளை பெறுவார்கள். அதுமட்டுமின்றி இந்த நேரத்தில், ப்ரமோஷன், உயர் பதவி அல்லது சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். முத்த அதிகாரியின் உங்களின் உறவு வலுவடையும். பல நாட்களாக சிக்கி இருந்த பணத்தை நீங்கள் திரும்பிப் பெறலாம்.
சிம்மம் (Leo Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் வருமானத்தில் நல்ல அதிகரிப்பை காணலாம். இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரேடியாக விலகும். புதிய வேலை வாய்ப்புகள் பெறலாம். உத்தியோகத்தில் மாற்றத்தை காண்பீர்கள், நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நிதி நிலை முன்பை விட அற்புதமாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): சுக்கிரன் பெயர்ச்சி மற்றும் லட்சுமி தேவியின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். சொத்து அல்லது மதிப்புமிக்க பொருட்களை இந்த நேரத்தில் வாங்குவீர்கள். தொழிலில் சிறப்பான லாபத்தை பெறுவீர்கள். பதவி உயர்வும், பண பலமும் பெரிய அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உங்கள் ஆசைகள் அனைத்தும் இப்போது நிறைவேறும்.
கும்பம் (Aquarius Zodiac Sign): சுக்கிரனின் ராசி மாற்றம் அதாவது சுக்கிர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். பணத்தை குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வியாபாரத்தில் வியாபாரிகளுலக்கு பெரிய லாபம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கை எதிர்பார்ததை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ