புதனின் நேரடி இயக்கம் மற்றும் சனியின் இந்த தலைகீழ் இயக்கம் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு முக்கிய கிரகங்களின் இயக்கம் வெறும் 2 நாட்களில் மாறிவிட்டது. ஜூன் முதல் வாரத்தில் புதன் மற்றும் சனியின் இயக்கத்தில் ஏற்பட்ட மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. செயல்களுக்கு ஏற்ப பலன் தரும் சனி பகவான் நபரின் நிதி நிலை, உடல்நலம், தொழில், உறவுகள் போன்றவற்றை பாதிக்கக்கூடும். மறுபுறம், புதன் கிரகம் செல்வம், வணிகம், புத்திசாலித்தனம் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரணியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கடந்த ஏப்ரல் 29 அன்று மகர ராசியில் இருந்து தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு மாறினார். இதன் போது ஏழரை நாட்டு சனியோ, சனி தசையோ நடக்கும் ராசிக்காரர்கள் சனியின் கொடுமையான பார்வையை சந்திக்க நேரிடும். அதோடு, ஜாதகத்தில் சனி பலவீனமான நிலையில் இருக்கும் ராசிக்காரர்களும் சில இன்னல்களை சந்திக்க நேரிடும். எனினும் சில ராசிகள் இதனால் நால பலனை பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி 2022: மேஷத்தில் பெயர்ச்சி; யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் 


அதேபோல் பொதுவாக ஒரு கிரகம் எப்பொழுது பிற்போக்கு நிலையில் இருக்கிறதோ, அதாவது, அது எதிர் திசையில் நகரத் தொடங்கும் போது, ​​அதன் தாக்கத்தின் தீவிரம் அதிகரிக்கிறது. அதனால்தான் கோள்களின் தலைகீழ் இயக்கத்தைக் கண்டு மக்கள் அதிகம் பயப்படுகிறார்கள். அதன்படி கடந்த ஜூன் 3 ஆம் தேதி புதன் பெயர்ச்சியானார். அந்த வகையில் இந்த 2 நாட்களில் நடந்த 2 பெரிய மாற்றங்கள் எந்த ராசிக்கு என்ன பலன் தரப்போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.


புதன்-சனி பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்


மேஷம்: புதன் மற்றும் வக்ர சனியின் சஞ்சாரம் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நல்ல நன்மைகளைத் தரும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். பணம் சாதகமாக இருக்கும். வீட்டில் அனைவரின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். பழைய சச்சரவுகள் தீரும்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன், சனியின் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலையிலும் வெற்றி தரும். நிறுத்தப்பட்ட வேலைகள் தொடங்கும். மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.


தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி செய்வதாலும், அதேபோல் சனியின் பெயர்ச்சியாலும் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பதவி உயர்வு-அதிகரிப்புக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அரசு வேலைக்கு தயாராகும் நபர்கள் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் சில நல்ல செய்திகள் வந்து சேரும்.


கும்பம்: சனியின் வக்ர பெயர்ச்சி மற்றும் புதனின் பெயர்ச்சியால், கும்ப ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். பணியிடத்தில் மரியாதை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். பிடிபட்ட பணம் கண்டுபிடிக்கப்படும். எதிர்பாராத பணவரவு வந்து சேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR