ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம்
Planet Transit in August: கிரகங்களின் ராசி மாற்றத்தால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்கள்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் கிரகங்களின் மாற்றம் மற்றும் பல விரதங்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில், 4 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றும். மேலும் நான்கு பெரிய விரதங்களும் இந்த மாதம் கடைபிடிக்கப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி ஆகஸ்ட் 1 ஆம் தேதி புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இது தவிர சூரியன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்களும் இந்த மாதத்தில் மாறுகின்றன. ஆகஸ்ட் 7, 2022 அன்று, சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து விலகி, கடக ராசிக்குள் நுழைகிறது. செவ்வாய் ஆகஸ்ட் 10 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் கோச்சாரம் ஆகிறது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்:
கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமான நேரத்தைக் கொண்டு வருகிறது. இக்காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். அலுவலக பணியில் இருக்கும் மக்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தெடி வரும். உடல் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
கடகம்:
ஜோதிட சாஸ்திரத்தில், கடக ராசியின் நான்காவது மற்றும் 11 ஆவது வீட்டிற்கு அதிபதியாக சுக்கிரன் கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மகிழ்ச்சியான உறவு, திருமண நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். மரியாதையும் அதிகரிக்கும். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும். அதிகப்படியான வேலை உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனுடன், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்:
ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதியாக கருதப்படுகிறார். எனவே, சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். சமூகத்தில் அவர்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பெயரும் புகழும் பெறுவீர்கள். உங்கள் திறமை மக்களை ஈர்க்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | கடக ராசியில் நுழையும் சுக்கிரன்; இந்த 5 ராசிகளுக்கு ‘ராஜயோகம்’ தான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ