ஆகஸ்ட் மாதம் நேற்று தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை மாற்றத்தின் பலன் 12 ராசிகளையும் பாதிக்கும். கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனையும், அதேசமயம் சில ராசிகளுக்கு அசுப பலனை ஏற்படுத்தி தாகரும். அந்தவகையில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை சில ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். எனவே இந்த வார ராசிபலன்களை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்-
12 ராசிக்காரர்களுக்கும் ஆகஸ்ட் 7 வரை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்....
மேஷம்- இந்த வாரம் உங்களின் திட்டப்படி வேலைகள் நடக்கும். அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழிலுக்கு நல்ல நேரம்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் மாத ராசிபலன்: உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யாருக்கு ஆதாயம்? யாருக்கு ஆபத்து?
ரிஷபம்- ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த வாரம் கவலைகளில் இருந்து விடுபடலாம். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். இருப்பினும், வரவிருக்கும் சவால்களுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
மிதுனம்- இந்த வாரம் உங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படலாம். பயணம் மேற்கொள்ளப்படும். மன அழுத்தத்தைத் தவிர்த்து, உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்கவும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
கடகம்- கடகம் ராசிக்காரர்கள் இந்த வாரம் சில இனிமையான செய்திகளைப் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை தரலாம். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கலாம்.
சிம்மம்- சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் பேச்சில் நிதானம் தேவை, இல்லையெனில் பல சர்ச்சைகளில் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள். முதலீடு செய்வதற்கு முன் ஒரு பெரியவரின் ஆலோசனையைப் பெறுவதை நன்மை தரும்.
கன்னி -கன்னி ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மன அழுத்தத்தை உணரலாம். இந்த வாரம் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும். இந்த வாரம் உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள், இல்லையெனில் காதல் வாழ்க்கையில் சிரமங்கள் ஏற்படலாம்.
விருச்சிகம்- இந்த வாரம் உங்களுக்கு கடினமாக இருக்கும். இந்த நேரத்தில், முதலீட்டு செய்யும் முன் கவனமாக இருக்கவும், இல்லையெனில் நிதி இழப்பு ஏற்படலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.
தனுசு- தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் உறவுகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
மகரம்- மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையாக இருக்கும். இந்த வாரம் தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவீர்கள்.
கும்பம்- கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பழைய காதல் மோதலாம். இந்த வாரம் உங்கள் நிதி முன்னேற்றம் ஏற்படலாம்.குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்வார்கள். பணியிடத்தில் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள். இதன் மூலம் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | குருவின் அருளால் அடுத்த 120 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ