மார்ச் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ப்ரமோஷன், சம்பள உயர்வு!!
Monthly Horoscope March 2023: 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாத ராசிபலன்: இன்னும் சில நாட்களின் மார்ச் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் நடப்பு நிதியாண்டின் கடைசி மாதமாகும். ஆகையால் ஊழியர்களுக்கு மார்ச்-ஏப்ரல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மார்ச் மாதம் பல ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தரப் போகிறது. பல ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் பெறப் போகிறார்கள். இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் ரீதியாக மார்ச் மாதம் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் விதத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும். பல வாய்ப்புகள் உங்கள் முன் வரும். பல வழிகளில் சில தடைகளும் இருக்கும், ஆனால் நீங்கள் அவற்றை சமாளிக்க முடியும். உங்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் பலன் தரும்.
ரிஷப ராசி
உங்கள் தொழிலில் அற்புதங்களைச் செய்வீர்கள். கடந்த சில மாதங்களாக தொழில் ரீதியாக உங்களுக்கு கடினமாக இருந்தது. மார்ச் மாதத்தில் உங்கள் அனைத்து செயல்களுக்கும் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் செய்தால் பெரிய லாபம் கிடைக்கும்.
மிதுன ராசி
இந்த மாதம் தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் கடமைகளில் திறம்பட செயல்படுவீர்கள். ஒட்டுமொத்தமாக, தொழில் ரீதியாக, இந்த மாதம் உங்கள் திறமையை மக்கள் முன் கொண்டு வரும்.
கடக ராசி
மார்ச் மாதத்தில் உங்களிடமிருந்து அதிக அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. புதிய பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். கடின உழைப்பின் இனிமையான பலன்களை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது.
சிம்ம ராசி
தொழில் விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் சிறந்த செயல்திறனை வழங்குவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அவர்கள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள். ஆகையால் அவற்றை புறக்கணிக்க வேண்டும்.
கன்னி ராசி
இந்த மாதம் கன்னி ராசிக்காரர்கள் திட்டப்படி எல்லாம் நடக்கும். நீங்கள் கனவு கண்ட வேலை அல்லது புதிய பதவி கிடைக்கும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு பாராட்டப்படும். போட்டித் தேர்வுகளின் விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும்.
துலாம் ராசி
மார்ச் மாதம் உங்களுக்கு கலவையாக இருக்கும். பணிச்சுமை மிக அதிகமாக இருக்கும். இப்போதைய வேகத்தில் பணிகள் முடிக்க கால அவகாசம் தேவைப்படும். பணியிடத்தில் சக ஊழியரின் உதவி உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
மேலும் படிக்க | சனி உதயமாகி இந்த ராசிகளின் தலைவிதியை மாற்றுவார்: பொற்காலம் தொடங்கும்
விருச்சிக ராசி
இந்த மாதம் உங்களுக்கு பிரகாசமாக இருக்கும். ஆரோக்கியமான மற்றும் பொருத்தமான தொழில் செய்ய பல வாய்ப்புகள் கிடைக்கும். இலக்கை அடைய மூத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் முயற்சியால் லாபம் அடைவீர்கள்.
தனுசு ராசி
தொழில் அடிப்படையில் உங்களின் மாதம் இனிமையாக இருக்கும். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பதவி உருவாகும். நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் பணிச்சுமை அதிகரிக்கும்.
மகர ராசி
இந்த மாதம் உங்களுக்கு பல தடைகள் வரும். நீங்கள் வியாபாரத்தில் இருந்தால் உங்கள் ஒப்பந்தங்கள் தடைபடலாம். உங்கள் பணியிடத்தில் கூட தடங்கல்கள் மற்றும் கவனச்சிதறல்கள் இருக்கலாம். உங்கள் தொழில் மற்றும் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
கும்ப ராசி
நீங்கள் வேலை செய்ய புதிய உத்தி வேண்டும். சவால்கள் நிறைந்த பல வாய்ப்புகள் இருக்கும். புதிய நுட்பங்கள் மற்றும் தொகுப்புகளுடன் பணிபுரிவது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களை நிரூபிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணிச்சுமை உங்களை ஆள்வதற்கு அனுமதிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ