சனி உதயம்: இந்த ராசிகளின் வாழ்க்கை வேற லெவலில் மாறும், மகிழ்ச்சி பொங்கும்

Shani Uday 2023: சனி உதயம் சில ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமையப்போகின்றது. இவர்கள் வேலை, வணிகம், பணம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் அனுகூலமான விளைவுகளை பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2023, 04:30 PM IST
  • உத்தியோகத்தில் உள்ள சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.
  • வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.
  • வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும்.
சனி உதயம்: இந்த ராசிகளின் வாழ்க்கை வேற லெவலில் மாறும், மகிழ்ச்சி பொங்கும் title=

சனி பகவானின் உதயம் 2023: வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை, இந்த முறை சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டுவரப் போகிறது.  மார்ச் 7 ஆம் தேதி ஹோலிகா தகனம் நடக்கும். வட இந்தியாவில் மிக முக்கிய திருநாளாக கருதப்படும் இந்த நாள், சமீப காலங்களில் தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றது. இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.  

மார்ச் 8 ஆம் தேதி ஹோலி பண்டிகை உள்ளது. இதற்கு முன் மார்ச் 6 ஆம் தேதி சனி பகவான் கும்பத்தில் உதயமாவார். 2023ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருக்கும் சனி பகவான் உதயமானவுடன் 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார். 

சனி உதயம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாய் அமையப்போகின்றது. இவர்கள் வேலை, வணிகம், பணம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் அனுகூலமான விளைவுகளை பெறுவார்கள். 

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை வலுவாக இருக்கும். தொழில் தொடர்பான பல வாய்ப்புகள் உருவாகும். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். உங்களது வேலை உங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கிக் கொடுக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | இந்த 5 ராசிகளின் அதிர்ஷ்டம் மூன்று நாட்களுக்குப் பிறகு பிரகாசிக்கும்

சிம்மம் 

உத்தியோகத்தில் உள்ள சிம்ம ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும்

துலாம்

பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உயர்கல்விக்கான வாய்ப்பு கிடைக்கும். துலாம் ராசியினருக்கு ஹோலி பண்டிகை பல நன்மைகளை தரப்போகிறது. தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலையில் சேரலாம்.

கும்பம்

ஹோலி பண்டிகைக்கு முன்னர் சனிபகவான் கும்ப ராசியில்தான் உதயமாகிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரப்போகிறது. முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம். நீங்கள் போடும் திட்டங்கள் வெற்றி பெறும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைநுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News