சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை
Malavya Rajyoga With Venus In Pisces: வருகிற மார்ச் 31 சுக்கிரன் மீன ராசியில் இடப் பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரன் தனது உச்ச ராசியில் பெயர்ச்சி அடையப் போவது, மாளவ்ய ராஜயோகத்தை உண்டாகும். இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் அதிர்ஷ்ட பலன் கிடைக்கும்.
Venus Transit 2024: ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது அதற்கு முன்னதாக மார்ச் 31 அன்று மாலை 4:46 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார், மீன ராசியானது சுக்கிரனின் உச்ச ராசியாகும். அந்த வகையில் சுக்கிரன் மீன ராசியில் நுழைவது, சூரியன் மற்றும் ராகுவுடன் ஒரு சேர்க்கை ஏற்படும். வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுக்கிரன் உச்ச ராசிக்கு செல்லும் போது மாளவ்ய ராஜயோகம் உருவாகும் என்பது ஐதீகம். மாளவ்ய யோகம் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மிகவும் அற்புதமான யோகாகவும் இது கருதப்படுகிறது. சுக்கிரனின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம் (Aries Zodiac Sign): மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பல நன்மைகள் கிடைக்கும், வாழ்க்கையில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்தத் தொழிலில் லாபம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் சாதகமான பலன் கிடைக்கலாம். தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மேலும் படிக்க | படுத்தி எடுப்பார் ராகு - கேது! குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு சிக்கல்!
சிம்மம் (Leo Zodiac Sign): சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அனைத்துத் துறையிலும் வெற்றி கிடைக்கும். பொருள் மகிழ்ச்சியைப் பெறலாம். பண வரவு உண்டாகும். வாழ்வில் மோதல்கள் குறையும், காதல் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தியைப் பெறலாம். நிதி நிலை மேம்படும்.
கன்னி (Virgo Zodiac Sign): கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படக்கூடும். பணத்தில் நல்ல அதிகரிப்பு காணலாம். வாகன மகிழ்ச்சி கூடும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும், நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்யோகத்தில் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். பெற்றோரின் ஆசியுடன் புதிய தொழிலை தொடங்குவீர்கள்.
துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் சுப பலன்கள் கிடைக்கலாம். வாழ்க்கையில் உத்வேகம் காணப்படும். சமயச் செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மதப் பயணம் மேற்கொள்ளலாம். பொருள் வசதிகள் கூடலாம். சொந்த தொழில் வளர்ச்சியடையும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
மீனம் (Pisces Zodiac Sign): மீன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறலாம். முதலீடு மூலம் நல்ல லாபம் கிடைக்கும், நிதி நிலை மேம்படும். சகோதர சகோதரியின் ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ