அக்டோபரில் செவ்வாய்ப் பெயர்ச்சி! முருகனை கும்பிட்டால் இரட்டிப்பு பலன்களைப் பெறும் ராசிகள்!
Mars Transit In Cancer : கடக ராசிக்கு செல்லவிருக்கும் செவ்வாய் பகவான், எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் நற்பலன்கள் அதிகம் தருவார்?
நவ கிரகங்களில், அதிக தீமைகளைக் கொடுக்கும் கிரகங்கள் சனி, ராகு மற்றும் செவ்வாய் ஆகிய அசுப கிரகங்கள் ஆகும். சனி முழு இருள் கிரகம்,ராகுவும் இருள் கிரகம் தான். செவ்வாய் முக்கால் அசுபர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மிதுனத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் செவ்வாய் பகவான், கடக ராசிக்கு அக்டோபர் 20ம் தேதியன்று பெயர்ச்சி ஆவார். எந்த லக்னத்தில் இருந்தாலும், சனி, ராகு, செவ்வாய் ஆகிய மூன்று அசுப கிரகங்களும் கூட்டு சேர்ந்தால் வாழ்க்கை நரகம் தான்.
இந்த மூன்று அசுப கிரகங்களும் ஒரே லக்னத்திலோ அல்லது ராசியிலோ தொடர்பு கொள்ளும் எவ்வளவு நல்ல காலமாக இருந்தாலும் பிரச்சனைகள் அதிகரிக்கும். அக்டோபர் 20ம் தேதியன்று கடகத்தில் பெயர்ச்சியாகும் செவ்வாய், பொதுவாகவே தைரியம், வலிமை, ஆற்றல், வேகம் மற்றும் உத்வேகத்தை வழங்கக்கூடியவர். அதனால் செவ்வாய்ப் பெயர்ச்சி ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை தரும் என்று சொல்வார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் இயல்பாகவே வலுப்பெற்றிருந்தால் சுறுசுறுப்புடன், ஆற்றல் உடையவராக இருப்பார். இன்னும் சில வாரங்களில் கடக ராசிக்கு செல்லவிருக்கும் செவ்வாய் பகவான், எந்தெந்த ராசிகளுக்கெல்லாம் நற்பலன்கள் அதிகம் தருவார் என்பதை விரிவாகப் பார்ப்போம். ஆனால், இவை பொதுப்பலன்கள் தான். அவரவர் ஜாதக அமைப்பின்படி, பலன்கள் மாறுபடும். அதிலும் மூன்று அசுபர்கள் இணையும் காலமாக இருந்தால் மோசமான பலன்கள் அதிகரிக்கும்.
செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகப் பெருமான். அவரை செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால், தீய பலன்களை குறைத்து, நல்ல பலன்களை இரட்டிப்பாக்கித் தருவார்.
கடக செவ்வாய் யாருக்கு நல்லது செய்வார்?
ரிஷபம்
செவ்வாய் பெயர்ச்சி, ரிஷப ராசியினருக்கு நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்படலாம். பதவி உயர்வு வரலாம். நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் நல்லபடியாக முடியும். எதிரிகளை வெல்லும் அமைப்பை செவ்வாய் பகவான் கொடுப்பார்.
மேலும் படிக்க | பேசியே காரியம் சாதித்துவந்த இந்த ராசிகளுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு கன்னியில் புதன்!
கடகம்
கடக ராசியில் பெயர்ச்சியாகும் செவ்வாய் பகவானின் மாற்றம், படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு, புதிய வேலை மாற நினைப்பவர்களுக்கு நன்மைகளைத் தரும். அரசு பணிகளில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணம், கடன் பிரச்சினைகள் தீரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு செவ்வாய் பகவானின் பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நிதி நிலை மிக சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. முதலீடு சார்ந்த திட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு ஏற்ற மிக சரியான நேரம் இது.
மகரம்
கடகத்தில் அங்காரகன் சஞ்சாரம் நிகழும் காலத்தில் மிக சிறப்பான பலன்களைப் பெறப்போகும் மகர ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். கடின உழைப்பு, முயற்சிகள் உங்கள் மேன்மேலும் பெரியளவில் உங்களை உயர்த்தும். நல்ல வாழ்க்கை அமைந்தது என்ற மகிழ்ச்சியும் திருப்தியும் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சொந்த ராசியில் உச்சமான புதன்! சூரியனுடன் சேரும் நெருப்பு கிரகத்தின் 12 ராசிகளுக்கான கன்னி புதன் ராசிபலன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ