பேசியே காரியம் சாதித்துவந்த இந்த ராசிகளுக்கு ஆப்பு வைக்க வந்தாச்சு கன்னியில் புதன்!

Budhaditya Rajyoga & Budh Gochar : செப்டம்பர் 23, 2024 அன்று, புதன் பெயர்ச்சியாகி கன்னி ராசிக்குள் நுழைந்தது. கன்னி ராசியில் ஏற்கனவே இருக்கும் சூரியனும் புதனும் இணைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. 

ஆனால் புதாதித்ய ராஜயோகம் கூட இந்த 4 ராசிக்காரர்களை கஷ்டங்களிலிருந்து காப்பாற்ற முடியாது என்று சொல்லும் அளவுக்கு பிரச்சனையில் சிக்கி சீரழியப்போகும் ராசிகள் இவை...

1 /8

புதன் பகவான் செல்வம், தொழில் மற்றும் வாக்கு சாதுரியத்திற்குக் காரகரர். இவர், 23 செப்டம்பர் முதல் 10 அக்டோபர் வரை புதன் கன்னி ராசியில் இருக்கிறார்.  

2 /8

புதனின் சுப காரகத்துவம் இருந்து புதாதித்ய யோகம் இருந்தாலும்,  இந்த நேரத்தில், 4 ராசிக்காரர்கள் சிரமப்படுவார்கள். எனவே, அக்டோபர் 10 வரை கவனமாக இருக்க வேண்டும்

3 /8

பொதுவாக, கன்னி புதனின் சொந்த ராசியாக இருப்பதால், புதன் கன்னியில் இருக்கும் போது சாதகமான பலன்களையே கொடுப்பார் என்றாலும், 4 ராசிகளுக்கு கன்னி புதன் மோசமான பலன்களைக் கொடுப்பார்

4 /8

மேஷ ராசிக்காரர்களுக்கு கன்னியில் புதன் சஞ்சாரம் பல வகைகளில் கெடுதல்களை ஏற்படுத்தும். சுறுசுறுப்பாக இருக்கும் உங்கள் வேலையை கெடுப்பதற்காகவே எதிரிகள் முளைத்து வருவார்கள். கணபதியை வழிபட்டால் நன்மை கிடைக்கும்

5 /8

புதனின் கன்னி ராசி சஞ்சாரம் கடக ராசிக்காரர்களின் வார்த்தைகளில் கசப்பை ஏற்படுத்தும். குறைவாக பேசுவதும், சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பதும் நல்லது. தோல் பிரச்சினைகள் பாதிப்பை ஏற்படுத்தலாம்

6 /8

துலாம் ராசிக்காரர்களும் அக்டோபர் 10 வரை கவனமாக இருக்க வேண்டும். நிறைய பணம் செலவாகும். கடின உழைப்பாளிகளுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அலுவலகத்தில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும்.  அதிக அளவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும்   

7 /8

புதனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருக்கும் நிலையில், மோதல்கள் மூளும் சூழ்நிலை வரலாம், எனவே கவனமாக இருங்கள். குடும்பப் பொறுப்புகள் சுமையாகத் தோன்றும் ஆனால், அது உண்மையல்ல என்பதை உணர்ந்தால் போதும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது