Guru Vakra Peyarchi 2024 : 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அக்டோபர் 9 முதல் சுக்கிரனின் ரிஷப ராசியில் எதிர்திசையில் இயக்கத்தை மாற்றும் குரு பகவான், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 வரை பிற்போக்காக இயங்குவார்.
குருவின் வக்ர இயக்கத்தால் சில ராசிகளுக்கு கஷ்டம் என்றாலும், அதையும் இஷ்டமாக மாற்றித் தருவார் குரு பகவான். அதாவது செலவுகள் ஏற்பட்டாலும் அது சுப செலவாக இருந்து மகிழ்ச்சியைக் கொடுக்கும் அல்லவா? அதுபோல கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு செய்ய வைப்பார் குரு பகவான்...
ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், அக்டோபர் 9, 2024 முதல் மிதுன ராசியில் வக்ர நிலையில் நகரத் தொடங்குவார்.
மிதுனத்தில் வக்ர கதியில் இயங்கும் குரு, பிப்ரவரி 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவார்
வக்ரநிவர்த்தி அடையும் குரு மீண்டும் ரிஷபத்தில் இயக்கத்தைத் தொடங்குவார். மிதுனத்தில் இயங்கும்போது வக்ர இயக்கக் காலத்தில் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சியால் நல்ல பலன்கள் நடைபெறும். குருவின் வக்ர பெயர்ச்சி மிதுன ராசியினரின் வாழ்க்கையின் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும். பண வரத்து அதிகரிக்கும், எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பதவி உயர்வு, சம்பள உயர்வு என வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலகட்டமாக இது இருக்கும்
கடக ராசிக்காரர்களுக்கு குருவின் வக்ர பெயர்ச்சி, நிம்மதியைக் கொடுக்கும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி, சமூகத்தில் அந்தஸ்து உயர்வு என நல்ல பலன்கள் அனைத்தையும் குரு பகவான் உங்கள் வசப்படுத்துவார்
விருச்சிக ராசிக்காரர்களுக்குப் பணமழை பொழியும் என்று சொல்லும் அளவுக்கு பண வரத்து இருக்கும். செல்வத்துடன் கெளரவமும் மரியாதையும் கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் தற்போது நிறைவேறும்
மிதுனத்தில் குரு சஞ்சரிப்பதால், கடகம், விருச்சிகம் மற்றும் மிதுன ராசியினரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாட்டையும் மிதுன குரு ஏற்படுத்துவார்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது