Mars Transit: செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சியானது அனைத்து 12 இராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பெயர்ச்சி, ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற்றது. இது அனைவரின் வாழ்விலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் பெயர்ச்சி ஆகும். அக்டோபர் 16ம் தேதி வரை செவ்வாய் இதே ராசியில் இருந்து ஆட்சி செய்வார். இதனால், 12 ராசிகளுக்கும் ஏற்படும் மாற்றங்கள் இவை. செவ்வாய் பகவான், நிலம், வீடு போன்றவற்றிற்கான அதிபதி. முருகனுக்கு உகந்த இந்த செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தில் இருந்து பலன்களைப் பெற கடவுள் வழிபாடு சிறந்தது. அதிலும் சிவகுமரன் எம்பெருமான் முருகனை வணங்கினால், செவ்வாய் தோஷம் எதுவாய் இருந்தாலும் அவை மட்டுப்படும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்- பொருளாதார முன்னணியில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். அக்டோபர் 18 க்குள், இந்த 6 இராசி அறிகுறிகள் சூரியனைப் போல பிரகாசிக்கும், முன்னேற்றத்தின் வலுவான அறிகுறிகள்


ரிஷபம்- செவ்வாய் பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு ஏற்றம் தரும் பலன்கள் உண்டு. பெற்றோரின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும்.  மனைவியுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உண்டு. பணத்தை மட்டும் பார்த்து செலவு செய்யவும்.  


மேலும் படிக்க | தரித்திரத்தை கொண்டு வரும் 'இந்த' பழக்கங்களை இன்றே கை விடவும்


மிதுனம்- செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 


கடகம்- செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தால் கடக ராசிக்காரர்களுக்கு பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் ஏற்படும்.


சிம்மம்- உங்கள்  துறையில் வெற்றிகளை சுவைப்பீர்கள். வணிகத்தில் லாபமான காலம் இது. கல்வியுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.


மேலும் படிக்க | அக்டோபர் 18 வரை சூரியனின் கோபப்பார்வையை எதிர்கொள்ளும் 5 ராசிகள்! எச்சரிக்கை அவசியம்


கன்னி- செவ்வாய் மாற்றத்தால் கன்னி ராசிக்கு சுபபலன்கள் ஏற்படும். செவ்வாய் கிரகத்தின் பெயர்ச்சி, உங்களுக்கு பல தற்செயல் நன்மைகளைக் கொடுக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைப்பதோடு, திடீர் பண வரவும் ஏற்படும்.  


துலாம்- துலாம் ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி தீங்கு விளைவிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நேரத்தில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாய் வார்த்தைகளை கட்டுக்குள் வைத்திருங்கள்.


விருச்சிகம்- விருச்சிக ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும் செவ்வாயின் தற்போதைய நிலையால் பண வரத்து அதிகரிக்கும். ஆனால், மனைவியின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.


தனுசு: செவ்வாயின் பெயர்ச்சியால் பண லாபமும், தன வரத்தும் அதிகம் உண்டாகும் யோகம் தனுசு ராசியினருக்கு ஏற்படும். இது இன்னும் ஒரு மாதத்திற்கு நன்மையான வரவாக இருக்கும். எதிரிகளை வெல்ல முடியும். தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் அதிகம்.  


மேலும் படிக்க | கன்னியில் உருவாகும் திரிகிரஹி யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு அமோக பலன்கள்!


மகரம்- செவ்வாய் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகளும் மகரமும் ஒன்று. வேலையில் முன்னேற்றத்தைப் பெறலாம். வர்த்தகர்கள் பயனடைவார்கள்.


கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு மனைவியுடனான உறவு பலமாகும் காலம் இது. தாயின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.  பணியிடத்தில் புதிய பொறுப்புகள் உருவாகும். இட மாற்றத்துக்கான வாய்ப்புகளும் தென்படுகின்றன.  


மீனம்:  உங்கள் தைரியத்தையும் வீரத்தையும் அதிகரிக்கும் செவ்வாய்ப் பெயர்ச்சி இது.. இந்த நேரத்தில் வேலைகள் மற்றும் வணிகத்தில் சாதகமான முடிவுகளைப் பெறலாம்.


மேலும் படிக்க | செப்டம்பர் 21 இந்திர ஏகாதசி! பித்ரு தோஷம் போக்கும் விசேஷமான நாள்!


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ