Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் சேனாதிபதியாக கருதப்படும் செவ்வாய் இந்த மாதம் தனது ராசியை மாற்றவுள்ளார். அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு செல்லும், அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷம் (Aries):


மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பண வரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலை மேம்படும். அலுவலகத்தில் இருந்த தடைகள் விலகும். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.


கன்னி (Virgo)


கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அனுகூலமான பலன்களை அளிக்கும். மன வேதனைகள் தீரும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வளரும். கன்னி ராசியில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் அதிகமாகும். மாத வருமானம் அதிகரிக்கும். இதனால் நிதி நிலை நன்றாக இருக்கும். இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது நடந்து முடியும். கடன் தொல்லை தீரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்


விருச்சிகம் (Scorpio)


செவ்வாய் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கும். விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வில் சுப பலன்கள் அதிகரிக்கும். கடினமான பணிகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் நிலைத்தன்மை இருக்கும். மேலதிகாரிகள் உங்கள் பணிகளால் மகிழ்வார்கள். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.


மகரம் (Capricorn)


ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். சட்ட சிக்கல்கள் நீங்கும். பணி இடத்தில் மாற்றம் ஏற்படும். ஊதிய உயர்வு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் தரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். 


மீனம் (Pisces)


ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பல வித தான தர்மங்களை செய்வீர்கள். இதன் காரண்மாக சமூகத்தின் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்கள் அதிக லாபம் காண்பார்கள். வேலை தெடிக்கொண்டு இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க |  3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ