3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்

Sukran Peyarchi Palangal: சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் பெயர்ச்சி பல மாற்றங்களை கொண்டு வருகின்றது.

Sukran Peyarchi Palangal: ஜூலை மாதம் சுக்கிரன் இரு முறை தனது ராசியை மாற்றுகிறார். முதலில் ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி ஆகிறார். அதன் பின்னர் 31 ஜூலை 2024 அன்று சிம்ம ராசிக்குள் நுழைவார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.  

1 /9

மகிழ்ச்சி, செழிப்பு, செல்வம், காதல், குடும்பம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் இன்னும் 3 நாட்களில் தனது ராசியை மாற்றி கடக ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த பெயர்ச்சி ஜூலை 7, 2024 அன்று அதிகாலை 4:39 மணிக்கு நடக்கும். 

2 /9

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

3 /9

மேஷம்: அனைத்து ராசிகளிலும் மேஷம் முதன்மையானது. இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரனின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வருமானம் பெருகும். தொழில் வாழ்க்கையிலும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். எந்த ஒரு தொழிலை தொடங்கினாலும் அதில் வெற்றி பெறலாம்.

4 /9

கடகம்: சுக்கிரன் ராசியில் ஏற்படும் மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு அதிக பலன் தரும். கடக ராசியில் சுக்கிரன் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நெருக்கடியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். செல்வம் குவியும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். சிக்கிய பணத்தையும் திரும்ப பெறுவீர்கள். குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வாழ்வில் செழிப்பும் சந்தோஷமும் இருக்கும். 

5 /9

கன்னி: சுக்கிரன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையை அற்புதமாக மாற்றும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் வெளிநாட்டில் தொழில் அல்லது புதிய வேலைகளைச் செய்யலாம், இது உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். அவர்கள் உங்கள் மீது அன்பைப் பொழிவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் பெருகும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

6 /9

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் சுக்கிரனின் தாக்கத்தால் சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். திடீர் பணவரவு ஏற்படும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் தொழில் தொடங்க நினைத்தால் அதிலும் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். 

7 /9

விருச்சிகம்: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அபார நன்மைகளை அள்ளித்தரும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவீர்கள். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும். வாழ்க்கையில் மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். மகிழ்ச்சி இருக்கும். சுக்கிர பகவானின் ஆசியைப் பெறுவீர்கள்.

8 /9

மகரம்: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். காதல் உறவுகள் ஆழமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். தந்தையின் உதவியால் பண ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலம்.

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.