புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

Budhan Peyarchi Palangal: ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு இருந்தால், அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகின்றது. அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 4, 2024, 12:23 PM IST
  • புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும்.
  • பெரிய முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
  • உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அற்புதமான நற்பலன்கள்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள் title=

Budhan Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் புதன் கிரகம் புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், மனசாட்சி, செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகின்றது. மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன் கிரகம். ஒருவரது ஜாதகத்தில் புதனின் செல்வாக்கு இருந்தால், அந்த நபருக்கு வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கருதப்படுகின்றது. அவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் அவருக்கு நல்ல வெற்றியையும் நற்பலன்களையும் அளிக்கின்றன. 

ஜூலை 19, 2024 அன்று இரவு 8:31 மணிக்கு புதன் சிம்ம ராசிக்குள் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் இருக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். இவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries): மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்

சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி ஆவது மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்தை அளிப்பதோடு சற்று நிதானம் மற்றும் ஓய்வையும் தரும். உங்கள் தொழில் மற்றும் வேலையில் திருப்தியும் ஆறுதலும் கிடைக்கும். வியாபாரத்தில் உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கும். வாடகை மூலம் நல்ல வருமானம் பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்பெறும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். 

மிதுனம் (Gemini): மிதுன ராசிக்காரர்கள் வேலை மாறலாம்

புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். உங்கள் தொழில், வியாபாரம், உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் இது நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த பெயர்ச்சி உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைய புதிய வாய்ப்புகளைத் தரும். நீங்கள் வேலை மாற்றம் அல்லது இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தால் அது இப்போது இருக்கும். வேலை நிமித்தமாக சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் அனுகூலமான விளைவுகள் ஏற்படும். வேலையை மாற்ற நினைக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஏற்ற நேரமாக இருக்கும். முயற்சி செய்தால் உங்களுக்கு விருப்பமான, மேன்மையான வேலை கிடைக்கும்.

மேலும் படிக்க | 3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள் 

சிம்மம் (Leo): சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு, புதனின் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வரவிருக்கும் நேரத்தில், நீங்கள் அதிக ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் இருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் அருளால் நல்ல வேலை கிடைக்கும். திருப்திகரமான மற்றும் நல்ல ஊதியத்துடனான வேலையை எதிர்பார்க்கலாம். வணிகர்கள் அவுட்சோர்சிங் மற்றும் பயணங்கள் மூலம் லாபம் அடைவார்கள், இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த நேரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிக சாதகமாக இருக்கும். இந்த காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பணத்தை சம்பாதிப்பதோடு சேமிக்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பையும் பாசத்தையும் அதிகரிக்க மென்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள்.

தனுசு (Sagittarius): தனுசு ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலனடைவார்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு , புதன் பெயர்ச்சி வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த நேரத்தில், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள், உங்கள் தொழிலில் முன்னேற்றம் இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் புதிய உறவுகளையும் உருவாக்குவீர்கள். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். அது உங்களுக்கு மனநிறைவைத் தரும். நிதி ரீதியாக இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகள் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும். உறவுகளில் ஒழுக்கம் முக்கியமாக இருக்கும்.

துலாம் (Libra): துலாம் ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்

புதன் பெயர்ச்சி துலா ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். பெரிய முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். இந்த காலம் உங்களுக்கு வெற்றிகரமான காலமாக இருக்கும். சிம்ம ராசியில் புதன் பெயர்ச்சி உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவதிலும் பெரிய முடிவுகளை எடுப்பதிலும் வெற்றியைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடையும். பண வரவு அதிகமாகும். அதனால் பொருளாதார நிலை மேம்படும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் உறவு வலுவடையும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மேலும் படிக்க | Rasipalan: குரோதி ஆண்டு ஆனி மாதம் 20ம் நாள் வியாழக்கிழமை ஜூலை 4 ராசிபலன் அறிவோம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News