ராசி பரிவர்த்தனை 2022: இந்திய கலாச்சாரத்தில் ஜோதிடம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு அனைத்து பண்டிகைகளும் ஜோதிட கணக்கீடுகளின் அடிப்படியில் கொண்டாடப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில கிரகங்களின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். சில கிரகங்களின் ராசி மாற்றம் பல சிக்கல்களையும் ஏற்படுத்தும். இன்னும் 140 நாட்களில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய ராசிகளில் மாற்றம் ஏற்படவுள்ளதால் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துலாம்: 


துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த 140 நாட்கள் மிகவும் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. இவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவார்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக இந்த நேரம் இவர்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அவர்களின் தேடல் இந்த காலகட்டத்தில் முடிவடையும். இந்த நேரத்தில் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும். ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.


மேலும் படிக்க | சிம்ம ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; அடுத்த 5 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!


மீனம்: 


மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் நீங்கி திடீர் பணவரவு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் புதிய சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.


வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். இப்போது நீங்கள் புதிய தொழில்களையும் துவக்கலாம். வருமானம் அதிகரிக்கும்.


மிதுனம்: 


மிதுன ராசிக்காரர்கள் அடுத்த 140 நாட்களில் வேலை-வியாபாரத்தில் நிறைய முன்னேற்றம் காண்பார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய நண்பர்களை திடீரென்று சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். நீண்ட நாட்களாக போக திட்டமிட்டிருந்த இடங்களுக்கு இப்போது செல்ல வாய்ப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்திய உறவு சுமுகமாக இருக்கும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதாரப் பலன்களின் கூட்டுத்தொகை உருவாகும்.


விருச்சிகம்: 


விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் இவர்களின் திறமை அதிகரிக்கும். எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் வெற்றி கிடைக்கும். பணி இடத்தில் பாராட்டப்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் உறவு சுமுகமாக இருக்கும். மனைவியுடனான திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை ஆகஸ்ட் 17 முதல் அமோகமாய் இருக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ