ஜோதிட சாஸ்திரத்தில், ஒரு ராசியின் இரண்டு கிரகங்கள் இணைந்தால், ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், பிப்ரவரி 27 அன்று புதன் கும்பத்தில் நுழையும் போது, ​​​​அது அங்கு ஏற்கனவே அமர்ந்திருக்கும் சனியுடன் புதன் இணைவார். இந்நிலையில்,  3 ராசிக்காரர்கள் இந்தக் கிரக கூட்டணியின் பலன் தொடர்பாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடகம்  


கடக ராசிக்காரர்களுக்கு புதன் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார், இந்த நேரத்தில் கடக ராசியின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இக்காலத்தில் சனியுடன் புதன் இணைவது சாதகமாக இருக்காது. உங்கள் சொந்தக்காரர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இந்த நேரத்தில் உங்கள் சகோதரர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில், நீங்கள் உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனமாக இருக்க வேண்டும்.  ​​பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். உங்கள் நெருங்கிய நண்பர்களை கூட நம்ப வேண்டாம். எந்த முடிவையும் சிந்தித்து எடுப்பது சிறந்தது.


மேலும் படிக்க | 700 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பஞ்ச மஹா யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!


கன்னி 


கன்னி ராசிக்கு புதன் லக்னாதிபதி மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியும் ஆவார். இந்த நேரத்தில், புதனின் பெயர்ச்சி உங்கள் ஆறாவது வீட்டில் இருக்கும். எனவே, சனி, புதன் கூட்டணியால் பகை அதிகரிக்கும். இந்த நேரத்தில், உங்கள் அலுவகம்  பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். செய்யும் வேலைகளில் இடையூறு ஏற்படலாம். இந்த புதனின் பெயர்ச்சி உங்கள் செலவுகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் பணம் வீண் பயணங்களில் செலவிடப்படும். உங்கள் தாய் வழியிலான உறவு நிலை கொஞ்சம் மோசமாக இருக்கலாம். உங்களுக்கு தோல் சம்பந்தமான நோய்கள் இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு நிறைய தீங்கு செய்ய முயற்சிப்பார்கள். அனைத்தும் திடமான மந்துடன் எதிர் கொள்ளவும்.


விருச்சிகம்


விருச்சிக ராசிக்கு எட்டு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதி புதன். இந்த நேரத்தில் புதன் பெயர்ச்சி உங்கள் நான்காம் வீட்டில் நடைபெறும். இந்த வேளையில் இந்த ராசிக்கு சனி திசை நடந்து வரும் நிலையில், எட்டாம் வீட்டின் அதிபதி சனியுடன் இணைந்திருப்பது மன வேதனையை அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் ஒரு புதிய நெருக்கடி ஏற்படலாம். உங்களின் பேச்சால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க கூடும். இந்த நேரத்தில், உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சனி, புதன் சேர்க்கையால் அரசு வேலை சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு நேரம் சற்று கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பில் இடையூறுகள் ஏற்படலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ