ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகிறது. நாளை, டிசம்பர் 28, 2029 அன்று, புதன் பெயர்ச்சி ஆகி மகர ராசியில் பிரவேசிக்கப் போகிறது, அதற்கு அடுத்த நாளே, டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரன் மகர ராசிக்குள் நுழைகிறார். புதன், சுக்கிரன் ராசியை மாற்றிய நிலையில் மகர ராசியில் சனி ஏற்கனவே உள்ள நிலையில், மூன்று கிரகங்களும் இணைவது லக்ஷ்மி நாராயண ராஜயோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தில், லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் மிகவும் மங்களகரமான யோகமாக விவரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 29, 2022 முதல், எந்த ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடங்கப் போகிறது என்பதை அறிவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணக்காரராக்கும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகத்தினால் பலன் பெறப்போகும் ராசிகள்!


மேஷம்: புதன், சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதனால் முன்னேற்றமும் உண்டாகும். வியாபாரம் பெருகும். பண ஆதாயம், பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வேலையைத் தொடங்க இது ஒரு நல்ல நேரம்.


மேலும் படிக்க | சிம்ம ராசிக்கான 2023 வருட பலன்: ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை!


மிதுனம்: டிசம்பர் 29 முதல் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். குடும்பத்தில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கும். மனதிற்கு அமைதி கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அனைவரின் ஒத்துழைப்புடனும் மகிழ்ச்சியுடனும் நேரம் அற்புதமாக இருக்கும்.


துலாம்: புதன், சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கும் சிறப்பான பலன்களைத் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் இனி நீங்கும். பணம் சாதகமாக இருக்கும். பழைய பொருளாதார பிரச்சனை நீங்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.


மேலும் படிக்க | மேஷ ராசிக்கான 2023 வருட பலன்: கடின உழைப்பு இருந்தால் போதும்... உலகம் உங்கள் கையில்!


விருச்சிகம்: புதன், சுக்கிரன் சஞ்சாரத்தால் உருவாகும் லக்ஷ்மி நாராயண ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அமைதியைத் தரும். சமயப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை, மகிழ்ச்சியில் திளைப்பார்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ