மகரத்தில் நுழையும் சுக்கிரனால் புத்தாண்டை அமோகமாக தொடங்க உள்ள ‘சில’ ராசிகள்!

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் சுபமாக இருக்கும் போது அன்னை லக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மறுபுறம், சுக்கிரன் அசுபமாக இருக்கும்போது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 27, 2022, 02:37 PM IST
  • வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பும் நீங்கும்.
  • வாழ்வில் சுகபோகங்கள் பெருகும்.
  • திறனை வளர்த்துக் கொள்ள இந்தக் காலக்கட்டத்தில் பயிற்சியிலோ அல்லது ஏதேனும் கருத்தரங்கிலோ கலந்து கொள்ளலாம்.
மகரத்தில் நுழையும் சுக்கிரனால் புத்தாண்டை அமோகமாக தொடங்க உள்ள ‘சில’ ராசிகள்! title=

தனுசு ராசியை விட்டு வெளியேறும் சுக்கிரன் 29 டிசம்பர் 2022 அன்று மகர ராசியில் நுழைகிறார். ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக,  தொழில், ஆன்மீக முன்னேற்றம் மற்றும் நல்ல பணம் சம்பாதிப்பது போன்றவற்றில் சில ராசிகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறி, நல்ல பலன்களைப் பெறுவார். ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. சுக்கிரன் சுபமாக இருக்கும் போது அன்னை லக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மறுபுறம், சுக்கிரன் அசுபமாக இருக்கும்போது, சம்பந்தப்பட்ட ஜாதகர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

1. மேஷம்

வருட இறுதியில் சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கப் போகிறது. இந்த சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு வேலையில், தொழில் துறையில் வெற்றியைத் தரும். ஒருபுறம், உங்கள் மூத்தவர்களின் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள், மறுபுறம், அலுவலகத்தில் உங்கள் சக ஊழியர்களின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் நீங்கும்.உங்கள் வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள். ஆணவத்தை தவிர்க்கவும். இந்த பெயர்ச்சி காலத்தின் போது அனைவரிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | சிம்ம ராசிக்கான 2023 வருட பலன்: ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை!

2. மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஆண்டின் கடைசிப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் எந்த ஒரு சொத்து தொடர்பான விஷயத்திலும் முதலீடு செய்தால், லாபத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. இதனுடன், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. வாழ்வில் சுகபோகங்கள் பெருகும், வாழ்க்கைத் துணையின் நல்ல ஒத்துழைப்பும் கிடைக்கும். நீங்கள் இன்னும் வாழ்க்கை துணையை தேடுகிறீர்களானால், இந்த நேரத்தில் உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள் திறனை வளர்த்துக் கொள்ள இந்தக் காலக்கட்டத்தில் பயிற்சியிலோ அல்லது ஏதேனும் கருத்தரங்கிலோ கலந்து கொள்ளலாம், அதன் பலன் இனிவரும் காலங்களில் நிச்சயம் கிடைக்கும். எனினும் பெயர்ச்சி காலத்தின் போது உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: 6 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி, பண மழையில் நனைவார்கள்

3. கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்தப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கன்னி ராசிக்காரர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல நினைத்தால் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மனக்கசப்பும் நீங்கும். இல்லற வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

4. மகரம்

நீண்ட நாட்களாக வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் நிலவி வருபவர்களுக்கு இந்த நேரம், அவை அனைத்தும் தீர்ந்து சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் புதிய மகிழ்ச்சி இருக்கலாம், அவர்கள் எப்போதும் இணைந்து ஒத்துழைப்புடன் இருப்பார்கள். கேஜெட்டுகள் மற்றும் கேளிக்கைகளுக்காக ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். ஆனால் உழைத்து சம்பாதித்த பணத்தை வீணடிக்க வேண்டாம். இந்தப் பெயர்ச்சி காலத்தில் பலன் மூலம், நீங்கள் சிறந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறப் போகிறீர்கள். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | மேஷ ராசிக்கான 2023 வருட பலன்: கடின உழைப்பு இருந்தால் போதும்... உலகம் உங்கள் கையில்!

 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை, மகிழ்ச்சியில் திளைப்பார்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News