Mercury Rahu conjunction Effects: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்ல, ராசி மாற்றங்களால் ஏற்படும் கிரகங்களின் இணைவும், அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தான் கர்த்தர் ஏற்படுத்துகிறது. அந்த வகையில், புதன் பெயர்ச்சியினால் ஏற்படும் புதன் ராகு இணைவு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள், வேலை தொழில் வியாபாரம், என அனைத்து வகையிலும் செல்வங்களை பெற்று, குடும்ப வாழ்க்கையிலும் இன்பங்களை அனுபவித்து, சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதன் பெயர்ச்சி புதன் ராகு இணைவும்


புதன் பெயர்ச்சி காரணமாக, சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுவும் புதனும் இணையப் போகிறார்கள். மார்ச் ஏழாம் தேதி புதன் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்க போகிறது. ராகு ஏற்கனவே மீனத்தில் உள்ள நிலையில், இரு கிரகங்களும் மீனத்தில் இணைகிறார்கள். இதனால் சகல இன்பங்களையும் பெரும் சில ராசிகளை அறிந்து கொள்ளலாம்.


ரிஷப ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்


புதன் பயிற்சியினால் ஏற்படும் ராகு புதன் சேர்க்கை காரணமாக ரிஷப ராசிக்கு வருமானம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களால் பொருளாதார நிலை மேம்படும். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஏற்ற காலம் இது. குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி, குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.


விருச்சிக ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்


விருச்சிக ராசிக்கு புதன் பெயர்ச்சியினால் ஏற்படும் புதன் ராகு சேர்க்கை சாதகமான பலன்களை அள்ளித் தரும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் வரும். இதனால் நீண்ட காலம் இருந்து வந்த கவலை விலகி மனதில் நிம்மதி பிறக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு சம்பள உயர்வு பெறும் வாய்ப்பு உண்டு. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத பண வரவினால் பொருளாதார நிலை மேம்படும்.


மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன்: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம்...வெற்றியின் உச்சம் தொடுவார்கள்


மீன ராசிக்கான புதன் பெயர்ச்சி பலன்கள்


மீன ராசியில் தான், புதன் கிரகமும் ராகவும் இணைகிறது. இதனால் மீன ராசிகளின் மன உறுதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். உங்கள் பணிகள் பாராட்டப்பட்டு, கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணத்திற்கு பற்றாக்குறை என்பது இருக்காது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்துக்கும் பணத்துக்கும் குறைவே இருக்காது.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | குரோதி தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ