ஜூன் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ள புதன் அனைவருக்கும் நன்மைகளைத் தருவார். மிதுனத்தில் புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும் என்றாலும், சிலருக்கு அமோக நற்பலன்களையும் சிலருக்கு மத்திமமான பலன்களையும், பலருக்கு மோசமான பலன்களையும் தருவார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரகங்களின் இளவரசன் என்று அறியப்படும் புதன் கிரகம், அறிவு சார்ந்த விஷயங்களுக்கு காரகர். பேச்சாற்றல், புத்திசாலித்தனம், கல்வி, கலை என அறிவு சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற உதவும் புதன் தற்போது ரிஷப ராசியில் இருக்கிறார். அவர், ஜூன் 14 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்கிறார். 


ஜூன் 14ஆம் தேதி இரவு மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி நடைபெறும். அப்போது மிதுனத்தில் இருக்கும் புதன் ஜூன் 27ஆம் தேதி உதயமாகிறார். மிதுன ராசியில் புதன் பிரவேசிப்பதால், அனைத்து ராசிகளும் பல மாற்றங்களை எதிர்கொள்வார்கள். அதிலும், மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாகும்.


பொதுவாக புதன் உதயமாகும்போது, ​​அதிர்ஷ்டம் அதிகரித்து, சுப பலன்கள் மட்டுமே கிடைக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.  அதிலும் அதிக அதிர்ஷ்டம் பெறும் ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேஷ ராசி


மேஷ ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, வேலையிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அத்துடன் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும் என்பதால், குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன.


காதல், திருமணம் என வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவளிக்கும் வாய்ப்பு கிடைக்கும், தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?


சிம்ம ராசி


சிம்ம ராசிக்காரர்களுக்கு காரணமின்றி தடைபட்டிருந்த வேலைகள் அனைத்தையும், மிதுன ராசியில் நுழையும் புதன் நல்லபடியாக செய்துக் கொடுப்பார். பணிபுரியும் இடத்தில் கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும். செய்யும் வேலையில் உங்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த அன்புக்கான பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.  


தனுசு ராசி


புதனின் சஞ்சார நேரம் சாதகமாக உள்ள ராசிகளில் தனுசு ராசியினர் முதலிடத்தில் உள்ளனர். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், சூழ்நிலை சாதகமாக மாறும். ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருந்தாலும், கவனமாக செயல்பட வேண்டும். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு பிடித்த படிப்பை தேர்ந்தெடுக்க உதவும். இது வெற்றி பெறும் காலம் என்று நீங்கள் மகிழ்ச்சியடையலாம்.  


கும்ப ராசி


கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் புதன் பெயர்ச்சி, குடும்பத்தில் புதுவரவுக்கான வரத்தைக் கொடுக்கும்.  பாக்கியம் கிடைக்கும். கும்ப ராசியை சேர்ந்த மாணவர்களுக்கு தற்போது நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்துடன் இருந்தால் வெற்றி பெறலாம். குடும்பத்தில் சுபசெலவுகள் அதிகரிக்கும். பணவரத்து அதிகரிக்கும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ