சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

Sani Vakra Peyarchi Palangal: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

 

Sani Vakra Peyarchi Palangal: சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான் தனது ராசியை மாற்றுகிறார். இந்த நிகழ்வு சனிப்பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. ராசி தவிர சனிபகவானின் நட்சத்திரம், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிரப் பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல வித மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. சனி வக்ர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம். 

1 /10

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கிய கிரகமாக கருதப்படும் சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.  நவம்பர் 15 ஆம் தேதி வரை அவர் வக்ர நிலையில் இருப்பார். சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். 

2 /10

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் நடக்கும். இவர்களது நிதி நிலை மேம்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் விருத்தி ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /10

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகமாகும். ஆகையால் நிதி நிலை மேம்படும். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் நீங்கி திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கும் சிறப்பாக அமையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம்.

4 /10

துலாம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் அடுத்த ஐந்து மாதங்களுக்கு துலா ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வாழ்க்கைத் துணௌயுடனான உறவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எனினும் பண விஷயத்தில் சற்று நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். முதலீடு செய்வதற்கான பல வித வாய்ப்புகளை பெறுவீர்கள்.

5 /10

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் வக்கிரப் பெயர்ச்சி பல வித அற்புதங்களை நிகழ்த்தும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அமைதியும் இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும்.

6 /10

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளைப் பெறலாம். தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களிலும் லாபத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மேலும் மூத்த அதிகாரிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

7 /10

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சி சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் பணத்தை சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது நல்ல முறையில் நடந்து முடியும். புதிய பணிகளை துவக்க இது சரியான நேரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள். 

8 /10

கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். உங்கள் ஆளுமையால் பலர் ஈர்க்கப்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 

9 /10

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா ஆகியவற்றை சொல்வது நல்லது. இது தவிர ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்பவர்கள் மீதும் அவர் அருள் பாலிக்கிறார்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.