புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்

Budhan Peyarchi Palangal: ஜூன் 14 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2024, 01:52 PM IST
  • புதனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலன்களை அள்ளித்தரும்.
  • ன்னி ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... பண வரவு, மகிழ்ச்சி அதிகரிக்கும்

Budhan Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன, இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.

Add Zee News as a Preferred Source

ஒருவருடைய ஜாதகத்தில் புதப் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் வாழ்வில் பல வித உச்சங்களைத் தொடுகிறார். வணிகத்தில் அதிக லாபம் காண்கிறார். கிரகங்களின் இளவரசராக இருக்கும் புதன் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். அவர் ஜூன் 14 ஆம் தேதி ரிஷப ராசியிலிருந்து விலகி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். அனைத்து கிரகங்களையும் போலவே, புதன் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். 

அனைத்து கிரகங்களின் பெயர்ச்சிகளும் 12 ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும். கிரகங்களின் பெயர்ச்சி மனித வாழ்க்கையையும், நாட்டையும், உலகத்தையும் பாதிக்கிறது. ஜூன் 14 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். செல்வமும், செழிப்பும் கூடும். பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட  ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

கன்னி (Virgo)

ஜோதிட சாஸ்திரப்படி, புதனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமான பலன்களை அள்ளித்தரும். கன்னி ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் இருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு வணிகம் விரிவடையும். இந்த ராசிக்காரர்களுக்கு இப்போது தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை.... வேலை, வியாபாரத்தில் வெற்றி!!

துலாம் (Libra)

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதனின் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதன் அருளால் பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. வெளியூர் சென்று படிக்க தயாராகிக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். கடவுளின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செய்யும் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடக்கும். 

கும்பம் (Aquarius)

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சி பலன் தரும். இந்த நேரத்தில், உங்கள் குழந்தைகள் மூலம் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி குழந்தை பாக்கியம் ஏங்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.  )

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News