திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்?

Trigrahi Yogam In Mithun Rasi: மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இணைவது உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? தெரிந்து கொள்ளுங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 11, 2024, 08:14 PM IST
  • திரிகிரஹி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்!
  • மிதுன ராசியில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன்
  • வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கிரகங்கள்
திரிகிரஹி தோஷத்தினால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அந்த ’நாலு’ ராசிக்காரர்கள் யார்? title=

நவகிரகங்களும் ராசி மண்டலத்தில் இயங்கிக் கொண்டே தங்கள் ராசிகளை மாற்றிக் கொண்டேயிருக்கின்றன. ராசிமண்டலத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்போது, ஒரே ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்கும் நிலையும் ஏற்படுகிறது. அப்படி ஒரு ராசியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை உருவாவது என்பது எல்லா ராசிக்காரர்களையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது.

தற்போது ஜூன் 12ம் தேதியன்று சுக்கிரனும், அதற்கு இரண்டு நாட்கள் கழித்து புதனும் மிதுன ராசியில் பெயர்ச்சியாகும் நிலையில், ஜூன் 15-ம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். எனவே, ஆனி மாதம் தொடங்கியதுமே, மிதுன ராசியில் மூன்று கிரகங்கள் இணைவதால் முக்கிரகங்களின் கூட்டு என்று அழைக்கப்படும் திரிகிரஹி யோகம்/திரிகிரஹி தோஷம் உருவாகிறது.

மூன்று கிரகங்கள் இணைவதால் ஏற்படும் பலன்கள் நன்றாக சுபமானதாக இருந்தால் அது திரிகிரஹி யோகம் என்றும், அசுப பலனாக இருந்தால், திரிகிரஹி தோஷம் என்றும் புரிந்துக் கொள்ளலாம்.

மிதுன ராசியில் புதன், சுக்கிரன், சூரியன் இணைவதால் ஏற்படும் கிரக நிலைகளால், 12 ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்படும். சாதகமாகவும், பாதகமாகவும் ஏற்படும் பலன்களால் மிகவும் பாதிக்கப்படும் ராசிகளில் நான்கு ராசிகள் முக்கியமானவை. ஏனென்றால் நல்லது நடப்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ளாவிட்டாலும், கெட்டது நடக்கும் என்ற ஊகத்தை சரியான நேரத்தில் தெரிந்துக் கொண்டால், அது எச்சரிக்கையாக இருப்பதற்கு நல்லதாக இருக்கும்.

தற்போது மிதுன ராசியில் சுக்கிரன் புதனுடன் இணையும் சூரியன் ஏற்படுத்தும் திரிகிரஹி தோஷத்தினால் சற்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | நாளை சுக்கிரன் பெயர்ச்சி! சுக்கிரனின் ராசி மாற்றத்தில் பணத்தை இழக்கப்போகும் ராசிகள்!

திரிகிரஹி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள் :

மேஷம் (Aries Zodiac Sign): திரிகிரஹி யோகம் (Trigrahi Yogam) மேஷ ராசியில் திரிகிரஹி யோகம் உருவாவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று அதிக கவனம் தேவை. மேஷ ராசிக்காரர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாக இருந்தாலும், தற்போது வேலை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பண விரயம், செலவுகள் அதிகரிக்கும். இது செலவுக்கான காலமாக இருப்பதால் விரயச்செலவுகள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.  

கடகம் (Cancer Zodiac Sign): மிதுன ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலை இப்போது முடிந்துவிடும் என்ற நிம்மதியில் இருந்த உங்களுக்கு ஏமாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவ வேண்டுமானால் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் கவனமாக செயல்படவும்.

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி தோஷம் நிதி நிலையை பலவீனப்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்கலாம் என்ற எண்ணம் நிறைவேறாது.

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி தோஷத்தால் விரயச் செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வேலைக்கு இருப்பவர்களிடம் வார்த்தைகளை சரியாக பயன்படுத்தவும். வார்த்தைகளை கவனமாக பிரயோகிப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம். Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மிதுன ராசியில் புதன் சஞ்சாரம்! ஜூன் 14 முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நீங்கள் தானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News