சூரியனும் புதனும் பிரிவதால் யாருக்கு நன்மை? புதாதித்ய தோஷம் விலகி வாழ்வில் வளம் பெறும் ராசிகள்!
Mercury October Month Transits : ஒரே மாதத்தில் இரு முறையை ராசியை மாற்றும் புதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு பாதிப்பு குறையும். புதாதித்ய தோஷம் விலகி நிம்மதியைப் பெறும் ராசிகள்...
புதாதித்ய ராஜயோகத்தின் பலன்களை தற்போது சில ராசியினர் அறுவடை செய்து வருகின்றனர். செப்டம்பர் 16ம் தேதியன்று புதன் கன்னி ராசிக்கு பெயர்ச்சியானதால், ஏற்பட்ட புதாதித்ய யோகம், அக்டோபர் 10ம் தேதியன்று புதன் பெயர்ச்சிக்குப் பிறகு மாறிவிடும். தற்போது ஒரே வீட்டில் இருக்கும் புதனும், சூரியனும் பிரிவதால் சிலருக்கு நன்மை என்றால் வேறுசிலருக்கு தீமையாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறைந்த நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் என்றால் அது புதன் தான். பொதுவாக புதன் 20 முதல் 23 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி கலை ஞானம் என பல திறமைகளுக்கு காரணமாகிறார்.
ஒருவரின் ஜாதகத்தில் புதனின் இருப்பு என்பது, முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும், புதன் தற்போது தனது சொந்த ராசியான கன்னி ராசியில் இருந்து அக்டோபர் பத்தாம் தேதியன்று துலாம் ராசிக்கு செல்கிறார். அதன்பிறகு, அதே மாதத்திலேயே அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசிக்கும் செல்லவிருக்கிறார். ஒரே மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றும் புதனின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.
அக்டோபர் மாத புதன் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிகள் எவை, அந்த ராசிக்காரர்களில் உங்களது ராசியும் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
புதனின் இரு ராசிப் பெயர்ச்சிகளுமே ஒட்டுமொத்தமாக மேஷ ராசியினருக்கு நல்லது. பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மன அழுத்தம் குக்றைந்து நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் ஆசைப்பட்ட விஷயங்களில் சில இந்த காலகட்டத்தில் நடைபெறும். புரட்டாசியில் நடைபெறவிருக்கும் துலாம் பெயர்ச்சியின்போது, நவராத்திரி காலமாக இருப்பதால் மகாலட்சுமி அன்னைக்கு நெய் தீபம் ஏற்றினால் சகல செல்வங்களும் வந்து சேரும்
கடக ராசி
கடக ராசியினருக்கு புதாதித்ய யோகம் மாறுவதால் நல்ல பலன்கள் நடைபெறும். பணியிடத்தில் தேவையான உதவிகள் வந்து சேரும். திட்டமிட்ட வேலையைத் தொடங்க நல்ல நேரம். வெற்றி கிடைக்கும் என்றாலும் அதற்கு கடினமான முயற்சிகளைப் போட வேண்டியிருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதாதித்ய யோகம் விலகுவதால் நிம்மதி கிடைக்கும். ஏனென்றால் இந்த ராசியினருக்கு தோஷமாக இருக்கும் புதன் - சூரியன் சேர்க்கை புகழையும் தரும். பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நிதி வரத்துக்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்துவரும்.
மகரம்
புதனின் அக்டோபர் மாத பெயர்ச்சிகள், மகர ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்தும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு நல்ல நேரம். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும் என்பதால் புதனின் பெயர்ச்சி மகரத்து நல்லது தான்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, புதன் துலாம் ராசிக்கு செல்வது, வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் வீடு தேடி வரும் காலம் இது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ